பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் பட்டாடைகளாலான கூடாரத்தில் ஓய்வாகச் சாய்ந்து கொண்டு, களியாட்டத்துக்கிடையே, கட்டளை பிறப்பித்துக் கொண்டுள்ள, படைத் தலைவன் அல்ல; குடும்பப்பெருமை காரணமாகவோ, கொலுமண்டபத்து தயவாலோ, படைத் தளபதியானவனல்லவே நெப்போலியன். ஓயாத உழைப்பி னால், மங்காத வீரத்தால், செயலாற்றும் திறத்தால், முன் ளணி நிற்பவன். எனவே, தன் படைவரிசையிலும் வீரம் காட்டப்படும் போதெல்லாம் பாராட்ட, பரிசு வழங்க, பெரிய பதவிகள் அளித்திடத் தவறுவதில்லை. தமது வீரச் செயலைப் பாராட்ட, வாழ்த்த, தலைவன் முன்வருவது தெரிந்ததும், படைவீரர்கள் புதிய எழுச்சி பெறத்தானே செய்வர். . 135. நெப்போலியனிடம், படை வீரர்களுக்கு ஏற்பட்ட பாசம், மிக உன்னதமானது. அவன் ஆணை எதுவாயினும். முறை எது கூறினும், தட்டாமல் தயங்காமல் மட்டுமல்ல, மகிழ்ச்சியுடன் அவற்றின்படி நடப்பர். வெற்றி பெற்றுத்தரத்தக்க மாவீரன், நமது தலைவன் என்ற உணர்ச்சி, படையிலே, எப்போதும், எத்தகைய சூழ்நிலையிலும், நெப்போலியனுக்காக உயிரைக் கொடுக்க வும், போர்வீரர் காத்துக் கிடந்தனர். அரச குடும்பத்தினர், சீமான்கள் என்போர் மட்டுமே பெரிய பதவிகளைப் பெற்று வந்தனர் பட்டாளத்தில், நெப்போலியன் அப்படிப்பட்டவன் அல்ல. எளிய குடும்பம். உழைப்பால் உயர்ந்தவன். எனவே அவனிடம் எளியகுடும்பத்தினரான போர்வீரர்களுக்கு உயிர். சொந்தத்தோடும் பந்தத்தோடும் பழக முடிகிறது. செல்லப் பெயரிட்டு அழைத்து மகிழ முடிகிறது. எனவே வேறு எந்தக் காலத்திலும் ஏற்படாதவிதமான தீவிர எழுச்சி காட்டிப் போரிட்டனர், நெப்போலியன் தலைமையில் இருந்து வந்த போர்வீரர்கள். துணிகரமான போக்குடன், பெரிய ஆபத்துக்களைப் பற்றிக் கவலைப்படாமல் போரிடும் வீரமிக்க பல தளபதி கள் தோன்றினர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வோர் அள வில், நெப்போலியன்களாகவே விளங்கினர். எதிர்ப்படை