பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய லிருந்தால் போதும் என்று, தங்கள் முகத்தைத் துடைத்துக் கொண்டு, மக்களுடன் கூடிக் கொண்டு, குதூகலம் காட்டிக் கொண்டனர். 148 பாரீஸ் விழாக்கோலம் பூண்டது. வீர வெற்றிகளைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. நெப்போவியன் ஊர் திரும்பவில்லை - ஜோசபைனுக்குக் கொண்டாட்டம். ஏனெனில், அவனுக்கு அளிக்க வேண்டிய வரவேற்புகள் -- வாழ்த்துகள் - பாராட்டுகள் -- யாவும் தேவிக்கல்லவர் கிடைத்தன! ஒரு சாதாரண சிப்பாயை மணம் செய்து கொள்கி றாளே, சிற்றரசனுக்கு ஏற்ற இந்தச் சீமாட்டி! இவளுடைய உடைக்கு ஆகும் செலவுக்கான பணம் திரட்டக்கூட.. முடி. யாதே, நெட்டோலியனால்!- என்று கேலி பேசியவர்களெல் லாம். இப்போது ஜோசபைன், 'கொடுத்து வைத்தவள்' என்று பேசிக் கொள்கிறார்கள், அவள் இல்லா இடத்தில்; எதிரிலே அவள் இருந்தாலோ, 'எல்லாம் உன்னைத்தொட்ட தால் கிடைத்த வெற்றிகள்' என்று புகழ் சொரிகின்றனர். பாரிஸ் நகரத்து நெடுஞ்சாலைகளிலே, அலங்கார வண்டியில் அமர்ந்து, புள்னகை பூத்த முகத்தழகி செல்கிறாள்; போர் நிறுத்தப்பட்ட பிறகு ஓய்வுகொள்ளும் நிலை ஏற்பட்டதால் மனதிலே சிறிதளவு வாட்டம் கொண்ட நிலையில், மிலான் நகர் அருகே கொலுவிருக்கிறான் நெப்போலியன், ஒரு கோட்டையில். அரசர்கள் அடிபணிந்திட, சீமான்கள் கட்டியம் கூறிட, சீமாட்டிகள் நடை உடை அழகு காட்டிடக் கொலுவிருக் கிறான நெப்போலியன். மணிமாடம்! ஆடம்பரப் பொருள் கள்! அவன் படுத்துறங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மஞ் சம்', மன்னர் காலத்தது; மலரணை போதுமா, தூக்கம் பெற. தூக்கம் வரவில்லை. எல்லாம் இருக்கிறது; அவள் இல்லையே! அவள் விரும்பும் சூழ்நிலை; பளபளப்பு, மினு