பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய பாரிஸ் செல்கிறான் நெப்போலியன்-வெற்றி உலா நடைபெறுகிறது. மக்கள் அவனைக் கண்டு களிநடமிடுகிறார் கள். ஆட்சிக் குழுவினர் ஆரத்தழுவிக் கொள்கிறார்கள். மரியாதைக் குண்டுகள் முழங்குகின்றன. 150 'வீரவெற்றிகள் பல பெற்ற இந்த மாவீரன், ஒரு துளி யாவதுபடாடோபம்காட்டுகிறானாபாருங்கள்' என்று பாமர மக்கள் பேசிப் பாராட்டும் விதமாக நெப்போலியன் நடந்து கொள்கிறான். பட்டாளத் தலைவன் உடைகூட அணிவ தில்லை. மிகச் சாதாரணமான வீடு! அலங்காரமற்றவண்டி! நாடகக் கொட்டகையில் இவனைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் காட்டும்போது, கூச்சப்படுவது, கோலாகல விருந் துகள் கொண்டாட்டங்கள் கிடையாது. வீட்டல், பல்வேறு துறைகளிலே உள்ள விற்பன்னர்களை வரவேற்று உரையாடி அறிவுக்கு விருந்து பெறுவதிலே நாட்டம் காட்டினான. நாட்டுக்குக் கீர்த்தி பெற்றளிக்கும் கடமையை மேற் கொண்டேன் -செய்து முடித்துவிட்டேன் என்று கூறுவது போலிருந்தது அவன் போக்கு. அறிவு வளர்ச்சிக்காக பாரிசில் ஒரு கழகம் அமைக்கப் பட்டிருந்தது; அதிலே உறுப்பினனாகி அறிவாளர்களுடன் அளவளாவினான். படைத்தலைவன் என்றால் கொல்லும் தொழிலை மேற்கொள்பவன்தானே! அவனுக்கு அறிவுத்துறை யிலே அக்கரை ஏற்பட முடியாதே! ஆனால் இந்த அதிசய மனிதனைப்பாருங்கள்! கற்றறிவாளருடன் உரையாடுவதைக் கேளுங்கள்! எத்தகைய மனப்பாங்கு, எத்தகைய நுண்ணறிவு, எதிலும் எல்லவனாக அல்லவா இருக்கிறான்! என்று பலரும் பாராட்டினர். பாரிஸ் நகரப் பத்திரிகைகள் நெப்போலியனுடைய அன்றாட நடவடிக்கைகளை விவரமாக எழுதின- பாராட்டு களுடன். என்ன உண்கிறான், என்ன உடுத்துகிறான், எங்கு உலவச் செல்கிறான். யாராருடன் உரையாடுகிறான், எவரி