பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய எகிப்து! பரோவா மன்னர்கள்---கடவுளின் பிம்பங்கள் ஆண்ட எழில்மிகு நாடு - நைல் நதியால் வளர்க்கப்பட்டு நானிலத்தின் நளினமிகு நாரீமணி என்று புகழப்பட்டு விளங் கும் நாடு! காவியமும் கலையும் கட்டடச் சிறப்பும் மிகுதி யும் கொண்டது. உலகிலே வேறு எங்கும் காண முடியாத, பிரமிட். கோபுரங்கள் கொண்ட நாடு. பாவைவமுைம் நீர் ஊற்றும் ஆங்கு உண்டு - எகிப்து காட்டும் கோபம், பாலை வன வெப்பம் - எகிப்து காட்டும் நேசம், குளிர்ந்த இனிய நீர் ஊற்று!! எத்தனையோ வீரச் செயல்கள் நிகழ்ந்திருச் கின்றன. அந்த நாட்டில். கடவுள்களை கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரச் செய்ய வல்லவர்கள் என்று விருது பெற்ற பாந்திரீகர்கள், மன்னனை மகேசனாச்க முடியும் என்று கூறி வந்த இடம்! சல்லாபிகள் புடைசூழ உல்லாசப் படகேறி ஓய்வுச் சுவை பெற்று வந்த செல்வர்கள், அங்கு ஆதிக்கம் பெற்றிருந்தனர். அடிமைகள், கூட்டம் கூட்டமாக-. உழைக்க உயிர்விட, பிரமிட் எழுப்ப, உழுது பயிரிட்டு கோதுமை அறுத்தெடுத்துக் களஞ்சியத்தில் கொண்டுவந்து சேர்த்திட. விண்ணகத்தில் ஏதுமில்லை; யாவற்றையும் இந்த மண்ணகத்தே கொண்டு வந்து சேர்த்துவிட்டோம் என்று கூறி இறுமாந்து கிடந்தனர் எகிப்தில். பொன்னும் பொரு ளும் மிகுதியாக. மணியும் நலநிதியும் ஏராளம். காதலும் கவிதையும் கைகோர்த்து விளையாடிய பூங்க!ா! அதேபோது வீரமறியா நாடு அல்ல; வெற்றி காணா நாடும் அல்ல! எகிப் திலே, பல சிற்றரசர்கள், அரபிகள், போரசுக்குக் ஈட்டுப் பட்டு இருந்து வந்தனர். விந்தைப் பூமி, எகிப்து! அழகும் ஆற்றலும் ஒன்றை ஒன்று தழுவிக் கொள்ளும்; அதுவே விரும்பத்தக்கமுறை என்று உலகுக்கு உரைத்திடுவதுபோலே, இங்குதானே வெற்றி வீரன் ஜுலியஸ் சீசரும், கண்ணாலே கொல்லும் கட்டழகி கிளியோ பாட்ராவும் காதற்களியாட் டம் நடத்தி, காலத்தை வெல்லும் காவியமும் ஓவியமும் உலகு பெற்றிடச் செய்தனர். ஆற்றலிலே, வெற்றி பல பெறுவதிலே அவனுக்கு நிகர் இல்லை என்ற விருது, சீச ருக்கு! அவள் விரும்பி, அதரத்தைச் சிறிதளவு பிரித்து, பவள மும் முத்தும் இந்தப் பொற்கொடியில் பார்! என்று காட்டி, 156