பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய பயன்பெற ஒரு பல்கலைக் கழகத்தையே உடன் அழைத்துச் செல்கிறான். 160 எகிப்து போகும் வழியிலேயே, மால்ட்டா தீவு சிக்கு கிறது அவன் கரத்தில், தொல்லை அதிகம் இல்லாமலேயே! அங்கு சில நாள் தங்கி, அமைதியையும் ஒழுங்கையும் ஏற்படுத்துகிறான். நெப்போலியன் அழைத்துச் செல்லும் கப்பற் படையை வழியிலேயே மடக்கி அழித்திட, பிரிட்டிஷ் கடற்படைத் தளபதி நெல்சன், காத்துக் கொண்டிருக்கிறான் -- நெப் போலியன் சிக்கவில்லை-- காற்றைத் துரத்திப் பிடித்துக் கைக்குள் அடக்க முடிகிறதா! எகிப்து செல்கிறது எதிர்ப் போரை முறியடிக்கும் ஆற்றல்படை. வீரமிக்க எதிர்ப்பு பயங்கரச் சண்டை - இரத்தம் பொங்கி வழிகிறது- நெப் போலியன் வெற்றி பெறுகிறான் எகிப்து பிரான்சுக்குப் பணிகிறது. அடிமை கொள்ள வரவில்லை; அக்ரமக்காரர்களிட மிருந்து மக்களை விடுவிக்க வந்திருக்கிறேன். நாடு பிடிக்கும் எண்ணத்துடன் வரவில்லை; நாட்டைத் தமது களி நடனக் காடாக்கிக் கொண்டுள்ள மாமூலூக்குகளின்-செருக்கு மிக்க சீமான்களின்-- கொட்டத்தை அடக்கி- மக்களுக்கு நல்வாழ்வு அளிச்சு வந்திருக்கிறேன் - என்று அராபிய மொழி யில் அச்சடித்த அறிக்கைகளை எகிப்திலே பரப்பி, பாமா மக்களிடமிருந்து எதிர்ப்பு எழாதபடி பார்த்துக் கொள்கி றான். மதநம்பிக்கை கொண்ட, மக்களை தன்வயப்படுத்து வதற்காக, எகிப்து நாட்டிலே உள்ள முஸ்லீம் மார்க்கத்தைப் போற்றுகிறான்-நெப்போலியன் முஸ்லீமாக மாறிவிட்டான் என்று வதந்தியே வுமளவுக்கு; பிறகோர் சமயம் நெப் போலியன் இந்தப் போக்கை விளக்கினான். 'எந்த நாட்டிலே நான் ஆதிக்கம் பெற நடமாடுகிறேனோ, அந்த நாட்டு மக்