பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் தானே வரும் எதிரிப் படை?' என்கிறார்கள். 'வரட்டும்! நாம் அவர்கள் வருகிறபோது அங்கு இருக்கமாட்டோம். முகாம் மாறும்' என்கிறார் அலெக்சாண்டர், 'எதுவரையில்?' என்று கேட்கிறார்கள் தளபதிகள். 'நாம் பின்வாங்கிச்செல்ல இடம் இருக்கும் வரையில்' என்கிறார். 'இடையில் சிக்கிய இடங்களை எல்லாம் எதிரிகள் அழிப்பார்களே' என்று கலக்கத்துடன் கேட்கிறார்கள். அழிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை. நாமே அழிப்போம். நாசமாக்குவோம். அவர்கள் நுழையும் இடத்தை, நாம் வெளி ஏறி வேறிடம் செல்லு முன்பு' என்று போர்முறை கூறுகிறார் அலெக்சாண்டர் திகைக்கிறார்கள் தளபதிகள்; விளக்கமளிக்கிறார் அதிபர். 179 "நமது நாட்டிலே நுழையும் எதிரிப் படை, பொன்னும் பொருளும் கிடைக்கும். உணவும் உரையுளும் கிடைக்கும். போரிட்ட அலுப்புத் தீரும்; புதிய வலிவு பெற்றுக் கொண்டு மேலும் தாக்குதலை நடத்தலாம் என்று எண்ணுவார்கள். அதுபோலத்தான் போரிலே நடைபெற்று வருகிறது. நாம் புதுமை முறை மேற்கொள்வோம். தாக்கத் துடிப்பார்கள்; சிக்கமாட்டோம்! உள்ளே நுழைவார்கள்; வெற்றிடமாகி விட்டிருக்கும். செல்வத் திருநகர்கள், பாதைகள் இடிபாடு களாகிவிடும்; பாலங்கள் தகர்க்கப்பட்டிருக்கும்! வீடுகள் தங்குமிடமாக இரா! களஞ்சியம் கருகிக் கிடக்கும்! கடை கள் சாம்பலாகிக் கிடக்கும். ஆறு குளம் குட்டைகள் சேறும் சகதியுமாகிவிடும்; வயல்கள் வெடித்துக் கிடக்கும்; ஆடு மாடு கோழி பன்றி மருந்துக்கும் கிடைக்காது. புல் பூண்டுகூடக் கிடைக்காது அவர்களுக்கு. அந்த விதத்தில் எல்லாவற்றையும் பொசுக்கி விடுவோம். எதிரியிடம் எதுவும் சிக்கலாகாது!