பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் பிரான்சு நாட்டை விட்டு நெடுந்தொலைவு வத்தாகி விட்டது; இனி அங்கிருந்து படைக்குத் தேவைப்படும் பொருள் ஏதும் பெற முடியாது. எல்லாம் ரஷியாவிலேதான் தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இங்குதான் ஏதும் இல்லையே! எல்லாம் கருகிக் கிடக்கின்றன. சாம்பலாகிக் கிடக்கின்றன. உணவுத் தட்டுப்பாடு; நோய் வேறு பரவு கிறது; படை படாதபாடு படுகிறது. 181 குடுசாவ் எனும் ரஷியத் தளபதி, ஒற்றைக்கண்ணன்; பொரோடினோ எனும் இடத்தில் படையுடன் இருந்தான் போரிட்டாக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. பெருத்த மகிழ்ச்சி, பிரான்சுப் படையினருக்கு, வந்தது வீரர்களே! நீங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த் திருந்த வாய்ப்பு. வல்லமையைக் காட்டும் வாய்ப்பு. உமது வீரத்தைப் பொறுத்திருக்கிறது வெற்றி. வெற்றி பெற்றால், எல்லாம் நமக்கு-மாரிகாலத் தங்குமிடம்--வாழ்க்கை வசதி கள் - விருதுடன் வீடு திரும்பும் வழிவகை

வழக்கப்படி உற்சாகமூட்டுகிறான் நெப்போலியன். பயங்கரமான போர்மூண்டுவிடுகிறது. இருதரப்பிலும் பலத்த சேதம். நிலைமை, மணிக்கு மணி மாறியபடி இருக்கிறது. பிணத்தின் மீது நடக்க வேண்டி இருக்கிறது--ரஷியப்படை விரட்டப்படுகிறது!! மாஸ்கோ! அதோ பொன்மயமாக விளங்கும் கட்டடம் நிறைந்த ரஷிய தலைநகரம்