பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் வாழ்த்த முடியவில்லை; வசைபாட மனம் இடம் கொடுக்கவில்லை; நீர் துளிர்க்கும் கண்களுடன், அவன் கல் லறைமுன் வியப்புடன் நிற்கத் தோன்றுகிறது. 190 அவன் கல்லறை புகுந்தான். ஆனால் அவன் கொண்டி ருந்த ஓரரசு, பேரரசு, வல்லரசு, என் அரசு எனும் விபரீத எண்ணம் கல்லறைக்கு அனுப்பப்படவில்லை. அனுப்பிவிட வேண்டும் என்று பாடம் புகட்டத்தான், அந்த மாவீரனின் கல்லறை காட்சிப் பொருளாகி நிற்கிறது. இரும்பு முள்வேலி - 1965 காஞ்சி ஆண்டு மலர். - இதயம் இரும்பானால் - 1962 திராவிடநாடு பொங்கல் மலர். ஆண்டுகள் - 1963 திராவிடநாடு பொங்கல் இரத்தம் பொங்கிய இருபது - மலர். PIRA 2 41A1 A1