பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



156 இறையனார் அகப்பொருள் யிடத்து வந்து பெயருந் தலைமகளைச் சார்ந்த இடையூறுகள் எய்தானாம் என்பது. இனி, ஆண்மைமிக்க தலைமகன் பிரிவு வேண்டுவதல்லது தலைமகள் வேண்டாள் கற்பினகத்து என்றவாறு. இது சொல்ல வேண்டா; என்னோகாரணம் எனின், ' களவினுள் தவிர்ச்சி காப்புமிகின் உரித்தே வரைவிடை வைத்த காலை ஆன.' (இறையனார்-கசு) எனவும், ' அல்லகுறிப் படுதலும் அவ்வயின் உரித்தே அவன்வர வறியுங் குறிப்பின் ஆன.' (இறையனார்-கஎ) எனவும் இவ்வகையான் இடையீடு தலைமகளைச் சார்ந்துழியவாக லாற் பெறப்பட்டது என்பது. இனி, ஓதல் காவல் பகை தணிவினை எள இவை தலைமகனியல்பாதலாற் கற்பினுள் தலை மகன் இடையீடாகலும் பெறப்பட்டது ஈங்கு உரைக்கவேண்டா என்பது. அவ்வகை இலேசினாற் பெறப்படும். அதனையே மாணாக்கன் இனிதுணரல்வேண்டி எடுத்தோதினார் என்பது. அல்லது, ஒரு திறத்தார், களவினகத்துத் தலைமகளுழைத் தங்கிப் பிற்றைஞான்று போதல் தலைமகற்கு இல்லை என்றவாறு என்ப; அது பொருந்தாது. வந்து பெயர்வதல்லது நீட்டிக்கில் இடையீடாம், அஃது உணரப்படுமாகலான் என்பது. மற்று என்னோ எனின், களவினுள் தவிர்தல் - என்பது தமியனா கற்றன்மை யொழிதல் என்றவாறு. நோய் தவிர்ந்தது வெப்புத் தவிர்ந்தது என்ப, ஒழிந்தது என்பார். இனிக், 'கிழவோற்கில்லை' என்பது, தலைமகற்கு இல்லை என்றவாறு எனவே, அவ்விருதிங்கள்காறுந் தெருளாதே வந்தொழுகும் தலைமகன்; தலைமகளாயின் அவ்விடத்து அன்று தெருளாளாயின் பிற்றை ஞான்று உணரும் என்பது ஆயின், இவனாகாதே தெருளற்பாலான், பெருஞானத்தனாகலான், இவ ளாகாதே தெருளாது விடற்பாலாள் அவன் துணைப் பேரறிவின ளன்மையானெனின், அதுவன்று. அவன்கணின்ற தமியனாதற் ஒன்மையை விலக்குவது இல்லை; இன்மையான், அப்பெற்றி சுட்டப்பட்டது. இவள் மாட்டு அதனை விலக்குவதுண்டன்றே, இவனது இளிவரவிற்கும் வருத்தத்திற்கும் கவன்ற கவற்சியென் பது. அதனான் இவன் தெருளாமைக்கும் இவள் தெருடற்கும் காரணம் இது என்பது, (ஙங) களவியல் முற்றும்