பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-டூக) இறையனார் அகப்பொருள் 207 தலைமகன் ஏன்றுகொண்டு போமாறும், அவர்களை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லும் வாய் பாடும், செவிலி பின் செல்லுமாறும், பின்செல்ல இடைச்சுரத்துக் கண்டார் சொல்லும் முறை மையும், கண்டார் இடைச்சுரத்துத் தலைமகளது நிலைமையுரைத்து மீட்குமாறும், தலைமகன் மகிழ்ச்சியா மாறும், தலைமகன் பொருள் முதலாயினவற்றிற்கு வரைவிடை வைத்துப் பிரிந்தவழி, தலைமகளைத் தோழி ஆற்றுவிக்குமிடத் துத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவனவும், வரைவொடு புக்கவழித் தந்தையும் தன்னையன் மாரும் மறுக்குமாறும், அவ்வழி நற்றாய் அறத்தொடு நிற்குமாறும், கற்புக்காலத்துத் தலைமகன் தலைமகளைப் பிரியும் பிரி வென்று சொல்லப்பட்ட பிரிவும், பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாளாகத் தோழி வற்புறுத் தனவும், பருவங்காட்டினவும், தலைமகன் வினைமுற்றுவித்து வந்தவாறும், அஃதுணர்ந்த தோழி சொல்லினவும், தலைமகன் வினைமுற்றினான் தேர்ப்பாகற்குச் சொல்லின வும், முகிலுக்குச் சொல்லினவும், தலைமகன் தலைமகளுடனிருந்து தோழி கேட்பச் சொல் லினவும், மற்றும், பரத்தையிற் பிரிவின்கண் துனியும் புலவியூட லும் அவற்றது விகற்பமும், பரத்தையிற் பிரிந்த தலைமகற்குத் தலைமகள் வாயின்மறுத் தனவும், வாயில்வேண்டிப் பாணன் முந்துறுத்தனவும், விருந்து முந்துறுத்தனவும், வாயில் பெற்றுப் புக்கனவும், மற்றும் பிறவுமெல்லாம் இதுவே ஒத்தாகத் தந்துரைக்க. (உசு)