பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கெழிலென் ஞாயிறு எமக்கு? 101

பொன்முடிச்சைக் குறிப்பிட்டுக் கொண்டு வருமாறு பணித் தான். ஆனால் அவன் மனைவி அவன் செயலுக்குத் துணை நிற்கவில்லை. எனவே, அவன் எண்ணம் என்ன வென் பதனைப் பிறருக்குத் தெரியாமல் மறைப்பதற்காகப் பின் வருமாறு பேசத் தொடங்கினாள்: ஐயோ! என் கணவர் இறுதி நேரத்தில் விளாம்பழத்தின் மீது ஆசைப்பட்டு விட்டாரே! விளாம்பழம் கிடைக்கும் பருவம் (Season) இஃதன்றே! இப்பொழுது என்ன செய்வேன்?’ என்று கதறியழத் தொடங்கினாள். கணவன்மேல் மிகுந்த அன்புகொண்டவள்போல் நடிக்கத் தொடங்கினாள். உறவினர்க்கெல்லாம் அக்குடும்பத் தலைவன் நினைத் திருந்த திட்டம் என்னவென்பது தெரிய இயலாமற் போய் விட்டது. மனைவியின் வஞ்சக நாடகம் - பொன்னாசை காரணமாக ஏற்பட்டுவிட்ட மாயப்பேச்சு அறத்தை எங்கோஅடித்துத் துரத்திவிட்டது. எனவே பொன்னாசை, கணவன் விருப்பத்திற்கு எதிராக மனைவியை மாற்றி விட்டதைக் காண்கிறோம். திருத்தக்க தேவரின் தீந்தமிழ்ப்

பாடலைக் காண்போம்:

கையாற் பொதித்துணையே காட்டக்

கயற்கண்ணா ளதனைக் காட்டாள் ஐயா விளாம்பழமே யென்கின்றி

ராங்கதற்குப் பருவ மன்றென் செய்கோ வெனச்சிறந்தாள் போற் சிறவாக் கட்டுரையாற் குறித்த வெல்லாம் பொய்யே பொருளுரையா முன்னே

கொடுத்துண்டல் புரிமின் கண்டீர். (சீவகசிந்தாமணி, கேமசரியாரிலம்பகம் : 142 எனவேதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே நம் முன்னோர்கள் திருப்பரங்குன்றஞ் சென்று திருமுருகப்

பெருமானை வணங்க முற்பட்ட வேளையில், பின் வரு வாறு வேண்டுதல் புரிகின்றனர்: