பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இலக்கியக் காட்சிகள்


என்ற விசுவாமித்திரனின் கூற்றாலும் உணர்த்தினார். எனவே தொடக்கத்தில் இராமனுக்கு அருகிலேயே அவனு டைய ஆசிரியரை இருக்கச்செய்து அவனுக்கு உண்மை யுணரும் ஆற்றலை வளர்த்துப் பின் வெற்றி பெற்றதாகக் கூறியுள்ளார் புலவர். தாடகையைக் கொன்றதில் இராம னுக்குச் சிறிதும் தன்னலமுமில்லை, உள்நோக்கமும் இல்லை.

ஆரணிய காண்டத்தில் விராதன், இராமனின் அம்பிற் கிரையாகி நற்கதி பெற்று வழிபாடே இயற்றுகின்றான். மாரீசன், பால காண்டத்தில் ஒருமுறை இராகவனின் அம்பு பட்டு மனத்துாய்மை பெற்றுச் சூழலால் இராவண னிடத்துத் தங்கிப் பின்னர் ‘அறம் பிறழ்ந்தவன் கையால் மாள்வதை விட அறத்திற்கே நாயகனான இராமன் எய்யும் கணைபட்டு உய்தி பெறுவது மேல்” என்று கருதி மாயமான் உருக்கொண்டு, சக்கரவர்த்தித் திருமகனை நெடுந்தொலைவு கொண்டு சென்று இறுதியில் அண்ண லிட்ட அம்புபட்டுப் புனிதம் அடைந்து உயிர் துறக் கின்றான்.

கிட்கிந்தா காண்டத்தில் வாலியை இராமன் வதை செய்கின்றான். வாலி வதையில்தான் கம்பரின் கட்டுக் கோப்புத் திறன் முழுமையாக வெளிப்படுவதைக்காண் கின்றோம். வாலி அரக்கனல்லன்; அவனோர் வானரம், ஆழ்ந்து நோக்கின் இரகவணனின் படைப்புக்கு இணை யான ஒர் படைப்பாகும். இராவணனும் வாலியும் சிறந்த சிவ பக்தர்கள். இருவரும் வரம்பிலா வரத்தினர். பிறன் மனை நோக்கியமையால்தான் இருவருக்கும் இறுதி கிட்டி யது. ஆற்றலில் இராவணனையே விஞ்சியவன் வா லி என்பதற்கும் போதிய குறிப்புகள் உள்ளன. இவ்வாறு பொதுத் தன்மைகள் பல காட்டி நுட்பமான வேறுபாட மைத்துப் பாத்திரப் படைப்பை உயர்த்துவதில் கம்பனுக்கு