பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட்ெ கிந்தா ராமன் * 119

வில்லை. அந்த ஆற்றல் இராமனிடமே இருந்தது. எனவே வாலியை விட இராமன் உயர்ந்த ஆற்றல் படைத்தவன்

ன்பது வெளிப்படை !

மற்றுமோர் உண்மையை மறந்து விடலாகாது. மரா மரங்கள் ஏழினையும் ஒரே அம்பால் துளைக்கக் கூடிய ஒருவன்தான் வாலியைக் கொல்லும் தகுதி பெற்றவனா வான்! அந்த வகையில் இராமன் ஒருவனே அதனைக் கொண்டவன் என்பது யாவரும் அறிந்த செய்தி.

நேருக்கு நேராகப் போரிடுவதற்குரிய உத்தியைக் கையாள முடியாத அளவிற்கு வரங்களைப் பெற்றவன் வாலி. எதிரே போரிடுபவர்களிள் வலிமையில் பாதியைப் பெற்றுக் கொள்ளும் வரத்தைப் பெற்றவன். அத்துடன் தன் வலிமையையும் சேர்த்து எவரையும் எளிதில் வெல்லக் கூடிய இயல்பினனாகவே விளங்கி இருக்கின்றான். அந்த வரத்தைக் கொண்டு தீயவர்களை அழித்திருந்தால் நன்மை பெற்றிருப்பான்; ஆனால் நல்லவர்களை அழிக்க முற்பட்ட போதுதான் அவன் அழிவை அவனே தேடிக்கொண்டான். போரிடுவோரின் வலிமையில் பாதி தனக்கு வந்துவிடும் என்பதை அவன் தன் மனைவி தாரையிடம் உரையாடும் போது கூறியதாகக் கம்பர், பாடலை அமைந்திருக்கிறார்.

பேதையர் எதிர்குவர் எனினும் பெற்றுடை ஊதிய வரங்களும் உரமும் உள்ளதிற் பாதியும் என்னதாற் பகைப்ப தெங்ஙனம் நீதுயர் ஒழிகென கின்று கூறினான்’

(கிட் வாலிவதைப் படலம் : 29)

என்பது அப்பாடல். வாலியின் இறுமாப்பும் அதற்குரிய

காரணமும் தெற்றென விளங்கும்.

மிக அண்மைக்காலம் வரையில் கொடுமையான

குற்றம் புரிந்தவர்கள் சட்டப் பாதுகாப்புக்குட் படாத