பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இலக்கியக் காட்சிகள்


வற்றாத வளம் சுரக்கும், வளமாகக் காவிரி பாயும் புண்ணிய பூமியில் இருந்தால்கூட அமைதியற்று அல்ல லுற்று மிடிமிகப் பெற்ற இன்னல் நிறைந்த வாழ்வினை வாழும் எண்ணற்றோரை நாம் காண்கின்றோம். அவர்கள் பணம் சேர்க்கப் பாடுபட்டார்களேயொழிய வாழ்வின் அமைதிக்கு - நெஞ்ச நிறைவுக்கு - நினைவின் இன்பத்திற்கு பண்பட்ட வாழ்க்கையின்பாற்பட்டுப் பகலோன் போல் ஒளிவீசித் திகழப் பாடுபடவில்லை. எனவே இலக்கியம் இத்துணை அருமையான ஒரு செயலினை மக்களிடையே என்றும் செய்து கொண்டு வருகிறது. எனவே மேலைநாட்டு இலக்கியமாயினும் சரி, நந்தமிழ் நாட்டு இலக்கியமாயினும் சரி, நாம் ஆழ்ந்து படித்து, அதன் இனிமையில் திளைத்து, அமைதி பெற்று, நெஞ்சினை வளர்த்து, அதே நேரத்தில் உடல் நலமும் பேணி விழுமிய வாழ்க்கையை இலக்கிய ஆசிரியர்கள் சொல்லிச் சென்றிருக்கும் சொல்லின் வழியே நடத்து வோமாக! # -