பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இலக்கியக் காட்சிகள்


மொழிபெயர்க்கப்பட்டு, அம்மொழியினின்று தமிழ்ப்படுத் தியவர் கொங்குநாட்டு விசயமங்கலத்தைச் சார்ந்த கொங்கு வேளிர் என்பவராவர். ஒன்பான் சுவையும் ஒருங்கே அமையப் பெற்றுப் பல சமண சமய வழக்கு களையும் தன்னகத்தே கொண்டுள்ள நூல் இஃதெனலாம்.

இலக்கணத் துறை சைனராலேயே பெரிதும் வளம் பெற்றதெனலாம். தொல்காப்பியனாரே சமணம் என்ற கூற்று, சரியோ தவறோ, நன்னுால் என்று பிற்காலத்துச் சிறந்ததோர் இலக்கண நூலினைத் தந்த பவணந்தியார் சைனரே என்பதில் தடையில்லை. மேலும் அகப்பொருள் வினக்கம்’ இயற்றிய நாற்கவிராச நம்பி, யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக் காரிகை எனும் இரு சீரிய யாப்பிலக்கண நூல்களை இயற்றிய அமிதசாகரர் (யாப்பருங்கல விருந்தியினை இயற்றியவர் குணசாகரர் என்ற கருத்தும் நிலவுகிறது) நேமிநாதம் எனும் நூலை இயற்றிய குணவீர பண்டிதர், வெண்பாப்பாட்டியல் என வழங்கும் வச்சணந்தி மாலையினை இயற்றிய குண வீரபண்டிதர் முதலானோர் சைன சமயப் பெரியோர்களே

ஆவர்.

மேலும், தொல்காப்பியத்திற்கு உரைகண்ட முதல் உரையாசிரியராம் இளம்பூரணரும், தமிழின் முதற் காப்பியமாம் சிலப்பதிகாரத்திற்கு உரைகண்ட அடி யார்க்கு நல்லாரும் அமண் சமயத்தைச் சார்ந்தவர்களே ஆவர். மேலும் தமிழினில் நிகண்டு என்னும் புதிய துறை யினைச் சைனர்களே தொடங்கி வாழ்வும் தந்தனர். சேந்தன் எனும் சிற்றரசன் வேண்டுகோட்கிணங்கத் திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டு, பிங்கல முனிவர் இயற்றிய பிங்கல நிகண்டு,வீரை மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு முதலான நிகண்டு நூல்கள்