பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

تمتع

பழந்தமிழரின் உலக நோக்கு S 5

வானத்தில் கதிரவன் எழுகிறான் என்பர். கதிரவன் ஒளி யின்றேல் உயிரினங்கள் வாழா. எனவே ஈண்டு உலகம்’ என்னுஞ் சொல் இடவாகுபெயராய், இவ்வுலகில் வாழும் மக்களை உணர்த்திற்று.

திருமுருகாற்றுப்படை தந்த நக்கீரர் போன்றே சிலப் பதிகாரம் தந்த இளங்கோவடிகளும், உலகைக் காத்து நிற்கும் திங்களையும், ஞாயிற்றையும், மழையையும் போற்றித் தம் காப்பியத்தினைக் கவினுறத் தொடங்கு கின்றார்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர் தார்ச்சென்னி குளிர்வெண்குடை போன்றிவ் அங்கண் உலகு அளித்தலான்.

திருவள்ளுவர்,

அகர முதல எழுத் தெல்லாம் ஆதி பகவன் முதற்றே ஊலகு

என்று தம் அற நூலைத் தொடங்கினார். எழுத்துக்கள் எல்லாம் ‘அ’ என்னும் எழுத்தைத் தலைமையாக உடை யன; அதுபோல் இவ்வுலகம் ஆதிபகவனாகிய கடவுளைத் தலைமையாகக் கொண்டது. இவ்வாறு திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். அவரே,

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு

(குறள்; 397) என்றும் குறிப்பிட்டுள்ளார். கற்றவர்கள் உலகிற்கே உரிய வர்கள் என்னுங் கருத்து இக் குறளாற் பெறப்படுகின்றது. மேலும் திருவள்ளுவர் உலகை அவாவிச் செயல் புரியும் சிறப்பினை ஒர் உவமை முகத்தான் பாராட்டுகின்றார்.