பக்கம்:இலக்கியக் கேணி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீணை

77

சாரீர வீணை” என்று பொருள் தரலாம் என்றும் பொருள் கூறுவர். சிலப்பதிகாரம் (3) அரங்கேற்று காதை வரி 26- “மிடறு ” என்பதற்குச் “சாரீரவீணை” என்றே பொருள் தந்தார். “சாரீரவீணை” என்பது இன்குரலைக் குறிக்கும்.

பெருங்கதையில் வீணையும் யாழும்

பெருங்கதை என்பது ‘கொங்கு வேளிர் ’ என்பவரால் இயற்றப்பட்டது; உதயணன் என்பானின் வரலாற்றைக் கூறுவது. இதில் உதயணன்-யாழின் கிழவன் (5-4; 104); யாழறிவித்தகன் (3-14: 241:1-38: 289); வீணைவித்தகன் (2-10: 174; 8-1: 189); வீணை வேந்தன் (4-2: 79) என்று யாழிலும் வீணையிலும் வல்லவனுயிருந் தமை தெரிகி றது. வாசவதத்தை - வீணைக்கிழத்தி (2-18: 82) என்று குறிக்கப் பெறுகிருள். ‘நல்யாழ் ந விற்றிய...... உதயண குமரன் ’ (1-47, 219-221) என்பதால் உதயணனே வாசவதத்தைக்கு யாழ்பயிற்றியவன் என்றறிகிறோம். யாழைப் பயிற்றுவிக்குமாறு வாசவ தத்தையின் தந்தை பணித்தலும்,

“அரும்பெறல் தத்தைக்(கு) ஆசா னாகிப்
போக வீணை புணர்க்கப் பெற்ற
தேசிக குமரன் திருவுடையன்”

என்று அடியவரும் ஆயத்தாரும் வியந்தனர்.

“வத்தவர் பெருமகன் வல்ல வீணை
தத்தை தனக்கே தக்கதால்”

என்று முற்றத்தில் இருப்பவர் தம்முள் பேசிக்கொண்டனர். யாழ் பயிற்றுவிக்க நல்ல நேரம் வந்தது. வாசவ-