பக்கம்:இலக்கியச்சுவை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

________________

28 டும். அப்படிச் சிந்தித்தோமானால் இந்த நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரதாஸ் ஸ்வாமிகள் அவருடைய கதைக் கருக்கள் முற்போக்கான சமுதா வாழ்வை எதிரொலிப்பதல்ல என்றெல்லாம் அப்பெரிய ரைக் குறை கூறி அவருக்கு செலுத்த வேண்டிய மரியாதை யைச் செலுத்தத் தவறும் நிலைமை ஏற்படாது என்று இருதுகிறேன். மற்றொரு கருத்தையும் உங்கள் முன் வைக்க விரும்பு கிறேன். கருத்து மட்டும் கலை அல்ல. கருத்து புலனுணர்ச்சி யோடும் (Sensation and emotion) இணைந்து நிற்க வேண்டும். அப்பொழுது தான் பண்படாது கிடைக்கும் ஒரு மனித அனுபவத்திற்குத் தகுதியான கலை உருவம் கொடுக் கும் திறமை ஏற்படும். உதாரணமாக கலாச்சாரத்தில் இதர அம்சங்கள் போல் அல்ல கலை. கலைக்குக் கண் கூடான அறிவு இன்றியமையாதது. அறிவு உணர்ச்சித் தரத்தைவிட, புலனுணர்ச்சித் தரத்தைவிட, புலனுணர்ச்சி உருவாகச் சித்திரம் (The stage of sensation and imagery) தாழ்ந்த நிலையில் இருக்கலாம். ஆனால் இதுவன்றிக் கலை இருக்க முடியாது. சொல்கிறேன். டால்ஸ்டாயின் சமுதாய வளர்ச்சிக் கருத்து தவறாக இருக்கலாம். ஆனால் ரஷ்யா வைப் பற்றிய அவருடைய கண்கூடான அறிவு (Perce ptional Knowledge) மிக ஆழமும் சர்வாம்சமும் கொண்டது என்பதை நாம் மறக்கக் கூடாது. இந்தி மொழியில் நாவல் சாம்ராட்டாக விளங்கும் முன்ஷி பிரேம்சந்தின் கருத்துக் கள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கலாம். ஆனால் ஆழத்திலும் எல்லை வட்டத்திலும் அவருடைய நாவல்கள் தான் இந்தியாவில் இன்றுவரையும் நிகரற்று விளங்கு கின்றன என்பது நல்லறிவாளர்கள் கண்ட முடிவு. இவற்றையெல்லாம் ஏன் கூறுகிறேன் தெரியுமா? கலைஞனை விமர்சிக்கும் பொழுது அவன் சிந்தனையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/32&oldid=1480300" இலிருந்து மீள்விக்கப்பட்டது