பக்கம்:இலக்கியச்சுவை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

________________

திரு. தமிழக விடுதலையைக் கண்ணாரக் காணுமுன், உடம்பை விட்டு உயிர் பிரிந்ததுதான். இலட்சியம் ஈடேறும் என்ற தன்னம்பிக்கையை ஆகஸ்ட் 17ம் தேதி திரு தமிழகம் கண்ட மக்கள் எழுச்சி அவருக்கு ஊட்டியிருக்குமென்பதில் அயமில்லை. பாரதியாரும் கவிமணியும் பாரதியாருக்கு முன்பே தோன்றியவர்; எத்தனையோ ண்டுகளுக்குப் பின்பு மறைந்தவர் கவிமணி ஆயினும் பாரதியார் பாடல்களிலுள்ள தேசபக்தி வேகம், சுதந்திர வகம் இவருடைய பாடல்களில் கா எண முடியாது. ஏனென்றால் இவருடைய வாழ்க்கை சூழ்நிலை அவருடைய சூழ்நிலை வேறு; வேறு. "மன்னரையும், மெய்ஞான மதக் குரவர் தங்களையும் மதிக்கலாகேன்" என்றான் பாரதி. ஆனால் கவிமணியோ ராஜபக்தி உடையவராக இருந்தார் என்பதை நான் நேரில் றிவேன். இவர் திருவிதாங்கூர் மன்னராட்சியில் அமைதி யான சூழ்நிலையில் பெரும் தூரம் உருவாகியவர். . பாரதியார் பாடல்கள் மகா ஆலவிருட்சத்தை வேரோடு பிடுங்கியெறியும் வேகங்கொண்ட பாடல்கள். தே. வி. யின். பாடல்கள் நேர்மாறானவை. அமைதிமிக்க பாடல்கள் பவழமல்லிகைப் பூவை உதிர்க்கவல்ல தென்றற் போன்ற பாடல்கள். ஒரு இளம் புலவர்; C 'புத்தேரிக் கவிமணியே பொதிகை மலைத் தென் றெலனப்புகழ் பெற்றாயே!" என்று பாடியது பொருந்தும். பழைய செம்மை சான்ற லக்கியங்களில் கவிமணி பெரிதும் ஈடுபாடு உடையவர். பாரதி பரம்பரையில் கவிமணியும் தலைசிறந்த கவிஞர். பாரதி, வள்ளுவனை, இளங்கோவை, கம்பனை. A 497-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/45&oldid=1480312" இலிருந்து மீள்விக்கப்பட்டது