பக்கம்:இலக்கியச்சுவை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

93 மக்களுக்கு மக்கள்‌ நலக்‌ கண்ணோட்டத்துடன்‌ விளக்க மாக அறிமுகப்படுத்தி வைக்கும்‌ பெரும்‌ பணியில்‌ சிதம்பர னார்‌ இறங்கினார்‌. 'கம்பன்‌ கண்ட தமிழகம்‌', “வள்ளுவர்‌ வாழ்ந்த தமிழ்‌ கம்‌', தொல்காப்பியத்‌ தமிழன்‌, “பத்துப்‌ பாட்டும்‌ பண்டைத்‌ தமிழரும்‌?” “எட்டுத்‌ தொகையும்‌ தமிழர்‌ பண்பாடும்‌? முதலிய சிறந்த நூற்களை உருவாக்கி தமிழன்னைக்கு அவர்‌ காணிக்கை செலுத்தியிருக்கிறார்‌.

கம்பன்கண்ட தமிழகம்‌ சிதம்பரனாரின்‌

முதற்‌ பெரும்‌ இலக்கிய

நூல்‌

இது.

ஜீவா காரைக்குடி கம்பன்‌ விழாவில்‌ “கம்பன்‌ கண்ட தமி மகம்‌ என்ற பொருள்‌ பற்றிப்‌ பேசினார்‌. பழமை வாதி களையும்‌, புதுமைவாதிகளையும்‌ ஒருப்போல சந்திக்க வைத்த அந்சப்‌ பேச்சு பின்னர்‌ புத்தக வடிவில்‌ வெளி

வந்தது. கம்பன்‌ எதிரிகள்‌ ஜீவாவின்‌ அந்தப்‌ பேச்சுக்‌ காக, அவரைத்‌ தமிழகம்‌ எங்கும்‌ புதிய பாகவதர்‌? என்று ஏசித்‌ திரிந்தார்கள்‌. அந்தச்‌ சிறிய நூல்‌ வெளிவந்த சில மாதங்களுக்கெல்லாம்‌ அதே பெயரில்‌ சிதம்பரனாரின்‌ “கம்பன்‌ கண்ட தமிழகம்‌” வெளிவந்தது. தமிழனின்‌ உயர்ந்த

சிறந்த

இலக்கியக்‌

பண்பாட்டுக்‌

களஞ்சியம்‌ - ஆக

கருவலம்‌--தேசியப்‌

பிதிரார்ச்சிதம

கம்பன்‌ காப்பியம்‌ என்று விளக்கிக்‌ காட்டுகிறார்‌, கம்பன்‌ தமிழ்த்துரோகி, ஆரிய அடிமை என்பன போன்ற குறு கிய இனவெறிக்‌ கூற்றுக்களையெல்லாம்‌ இனித்‌ தூள்‌ தூளாக்க முடியாதபடி பொடி சூர்ணம்‌ ஆக்குகிறார்‌ இந்த நூலில்‌. தமிழில்‌ கம்பனின்‌, வணக்கத்திற்குரிய இடத்தைக்‌ காணவும்‌ ஒளி காட்டி வழி காட்டுகிறார்‌, இதில்‌. இன்றைய

இலக்கிய

இயக்கத்தில்‌

எழுந்துள்ள

சூடேறிய கேள்விகளுக்குப்‌ பதில்‌ சொல்லும்‌

நூல்‌ இது.

பல

அற்புதமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/97&oldid=1523031" இலிருந்து மீள்விக்கப்பட்டது