பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. தோற்றுவாய்

பாரினில் எழிலுடன் இலங்கும் பல்வகைப்பட்ட இயற்கைப் பொருள்களைப் புலவர் பெருமக்கள் தாம் கண்டு களித்ததோடு நில்லாது, அவற்றினைக் கூர்ந்து உணர்ந்து, உணர்வுடன் குழைத்து, உருகிப் பெருகி தம் உள்ளத்தின் தோற்றமாய், உணர உணர அன்பின் நிறைவால் ஊற்றெழும் கண்ணீரை ஒழுகச் செய்வதாய், உணர்ச்சி ஊடுருவப் பெற்றதாய், படிக்குந்தோறும் இனிமை ஊட்டிப் பின்னர் அதனை எண்ணுந்தோறும் இன்பம் பயப்பதாய் விளங்கும் சொல்லோவியங்களாக (Word Pictures) அமைக்கும் பாடல்களே என்றும் நிலைத்து நிற்கும் ஆற்றல் உடையதாகின்றன.

தமிழ் நூல்களில் உயிருள்ள பொருள்களைப்பற்றியும், உயிரில்லாத பொருள்களைப்பற்றியும் பாடப்பட்ட பல பாக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பறவைகள் விலங்குகளைப்பற்றிப் பாடியுள்ள பாக்களை நோக்கும் பொழுது தனிப்பட்ட உண்ர்ச்சி-ஒருவித ஆர்வம் இயற்கையாக எழுகின்றது. மன உணர்வினை உடைய கவிஞன் ஏனைய விலங்கு பறவை முதலிய மன உணர்வில்லா நண்பர்களோடு உறவாடி, தான் சொல்லவேண்டிய கருத்தினை விளக்கமுற எடுத்தியம்ப விழைகின்றன். இந்த நண்பர்களின் உதவியால் கவிஞன் தன் கருத்தை மக்கள் மனத்தில் பதியுமாறு எளிதாக எடுத்து இயம்புகின்றான். வண்டு, தும்பி, கிளி, குயில், காகம், அன்றில் முதலிய பறவைகளையும், குரங்கு, வேழம், முதலிய விலங்குகளையும் நுணித்து அறிந்து, அவை அறிவுறுத்தும் செய்திகளாகக் கவிதைகள் பலவற்றைப் பைந்தமிழ்ப் புலவர்கள் நமக்கு