பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்து விடுவார். பெண் குழந்தைகள் அவ்வளவு பேரையும் முன்னால் அமர வைத்துப் பாடச் சொல்லுவார். பாடி, பூஜை யெல்லாம் முடியும் வரை நாங்கள் தின்பண்டங்களுக்காக ஆவலோடு காத்திருப்போம். வீட்டில் கண்ணன், பெருமாள், சரஸ்வதி படங்களோடு பாரதியார், காந்தியடிகள், நேரு, சுபாஷ் சந்திரபோஸ், கல்கி, தாகூர் படங்கள் இருக்கும். அப்பாவுக்கு தன்னைப் படங்கள். எடுத்துக் கொள்வதில் ஆர்வம் கிடையாது. போட்டோவுக்குப் போஸ் தரவே மாட்டார். அதேபோல் மேடையேறிப் பேசுவதிலும் விருப்பமில்லை. எழுத்தில் இருந்த வேகமும் துடிப்பும் அவர் மேடையில் பேசியிருந்தால் வெளிப்பட்டிருக்க லாமோ என்னவோ! இறை நம்பிக்கையோடு விளங்கிய அப்பாவின் கடைசி நாள்களில் ஒரு மாற்றம் உண்டானது. சுய மரியாதைக் கொள்கை களில் ஈடுபாடு ஏற்பட்டது. பெரியாரின் கொள்கைகளை விளக்கி 'பெரியார் அரிச்சுவடி என்று ஒன்றை எழுதி அச்சிடாமலே அதை வைத்திருந்தார். 'குட்டக் குட்டக் குனிபவன் முட்டாள் நூலோர் எல்லாம் மேலோர் அல்லர் கைம்பெண் ணாயினும் கட்டு தாலியை கிளர்ச்சிகள் இன்றி வளர்ச்சி இல்லை போன்ற சிந்தனைகளோடு கோயிலென்றும் குளம் என்றும் சுற்ற வேண்டாம் என்றும் எழுதப்பட்டிருந்த அந்த 'அரிச்சுவடி"யை அப்பா மறைந்து பன்னிரண்டாண்டுகள் கழித்து 1987இல் நாங்களே வெளியிட்டோம். - எழுத்துகளில் நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்ததிலும் அப்பாவுக்குத் தனியிடம் உண்டு. அன்பு அலறுகிறது', 'மனிதன் மாறவில்லை’ போன்ற கதைகளுக்காக நீதி மன்றம் வரை போக நேர்ந்தது. அன்பு அலறுகிறது. கதை 'அமுதசுரபி' இதழில் தொட ராக வந்தபோது அத்தியாயத் தொடக்கத்தில் பூத்தொடுக்கும் விரல்களை வரையும்படி ஒவியர் 'ஸாபா'வுக்கு ஆலோசனை தந்தாராம். அத்தியாயம் - 1 என்றால் ஒரு கண்ணி, அத்தியாயம் -2 என்றால் இரண்டு கண்ணிகள் என்று பூக்கள் இருக்கும். ஒவிய மனத்தின் சிந்தனை இது. - இலக்கியப்பீடம் - அக்டோபர் 2Oos • 11