பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் நண்பர் ஸுபா தாம்பரத்தில் வசித்து வந்தார். கிழக்குத் தாம்பரத்தில் அவர் வீடு, அவர் தந்தை நாராயண அய்யர் மளிகை வைத்து நடத்தி வந்தார். எனவே, என்னுடன் மிக நெருங்கிப் பழகி வரும் ஸுபாவின் வீட்டு முகவரி கொடுத்து, விண்ணப்பம் ஒன்று அனுப்பினேன். விண்ணப்பம் அனுப்பிய மூன்றாவது நாள் ஸுபா, கையில் ஓர் கவருடன் முக மலர்ச்சியுடன் என் வீட்டிற்கு வந்தார். ஸ்பென்ஸர் கம்பெனியிலிருந்து வந்திருந்தது. மறுநாளே நேர்முகப் பேட்டிக்கு வருமாறு அதில் கண்டிருந்தது. - மவுண்ட் ரோடிலுள்ள அலுவலகங்கள் அநேகமாக காலை எட்டரைக்குத் தொடங்கி மாலை ஐந்தரை வரை இயங்கும். காலை எட்டரைக்கே நான் ஸ்பென்ஸர் கம்பெனிக்குச் சென்றேன். என்னை வேலைக்கு நியமிக்கும் முன்பு இன்டர்வியூ செய்ய விருந்த, பிரதம கணக்காளர் முன் போய் நின்றேன். அவர் பெயர் தில்லான். கிறிஸ்தவர். இனிய சுபாவமுடையவர். என் விண்ணப்பத்தைப் பார்த்தார். மேஜை மீது ஏராளமான விண்ணப்பங்கள் இருந்தன. என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார். அரைக்கைச் சட்டை, நாலு முழ வேட்டி. மேலே துண்டு அணியவில்லை. - - வெள்ளைக்காரர் நிறுவனத்தில் கோட் - சூட் அல்லது பைஜாமா, டை, காலில் பூட்ஸ் சகிதம் செல்ல வேண்டும். என் காலில் செருப்பு இல்லை. பல ஆண்டுகள் நான் செருப்பு அணியாததற்குக் காரணம், வாங்க வசதியில்லாததுதான். நல்ல செருப்பு அணிய வேண்டும் என்ற என் பிள்ளைப் பிராய ஆசையை, என் உறவினர் ஒருவர் முளையிலேயே கிள்ளி விட்டார். யுத்த காலத்தில் விடுமுறையின்போது விழுப்புரத்தில் உறவினர் வீட்டிற்குச் செல்வேன். அங்கே வந்திருந்த மற்றோர் உறவினர் என் காலில் செருப்பு இல்லாததைக் கவனித்து செருப்பு வாங்கித் தருவதாக கடைத் தெருவுக்கு அழைத்துச் சென்றார். விழுப்புரம் கடை வீதியிலுள்ள எல்லா செருப்புக் கடைகளிலும் ஏறி இறங்கினார். எனக்கு அலுப்பு ஏற்பட்டது. தனக்கு நல்ல செருப்பை வாங்கிக் கொண்டார். 'உன் காலுக்கு எதுவும் சரியாக அமையவில்லை என்று கூறிவிட்டு, அடுத்த முறை வரும்போது இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 65