பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 சோழன் வீரத் தனிக்கொடி தியாகக்கொடியொடும் அரசாண்டவன் என்றும்,! அதிராசேந்திர சோழன் "தியாகக்கொடி' யுடையவன் என்றும், முதற்குலோத் துங்க சோழன் 'லீரமுந் தியாகமும் விளங்கப் பார் மிசை' ஆண்டவன் என்றும் கல்வெட்டுக்கள் உணர்த்து கின் றன. ஆகவே, சோழமன்னர்கள் எல்லோருமே தியாக விநோதர்களாக இருந்தனர் என்பதில் ஐயப் பாடு சிறிதும் இல்லை. ஆதலால் தியாகவிநோ தன் என்ற தொடர் மூன்றாங்குலோத்துங்கசோழனையே குறிக் குமென்று கொள்வதற்கு இடமின்மை அறியற்பால இரண்டாவது சான்கைக் காட்டப்படும் பழம்பாட வில் குறிக்கப்பெற்ற 'ஆயிரத்து நூவெழித்த' சகம் -ஆண்டு, தொள்ளாயிரம் ஆகுமேயன்றி ஆயிரத்து நூறாகாது. எனவே, அ.திற்கண்ட காலக்குறிப்பு, கி, பி. 978- ஆம் ஆண்டைக் குறிக்குமேயல்லாமம் கி.பி. 1178-ஆம் ஆண்டைக் குறிக்காது என்பது தேற்றம். ஆகவே, இரண்டாவது சான்றும் பொருந்தாமை காண்க, இது காறும் கூறியவா ற்றல் கம்பர் இராமாயணம் பாடியது மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலமாகிய கி. பி. 1178-ஆம் ஆண்டன்று என்பது நன்கு தெளியப்படும். இனி, கம்பர், பிய நீங்குபடலத்திலுள்ள, * புவிபுகழ் சென்னிபே ரமலன் தோன்புகழ் கவிகள் தம் மனையெனக் களக ராசியும் சவியுடைத் தூசுமென் சாந்து மாலையும் அவிரிழைக் குப்பையு மளவி யாதது.' 1 Epigraphia Indica, Vol. XVI, No. 38. 2 s. 1. 1. Vol. VIII, No. 4. 35.1.1., Vol. V. No. 1003.