பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விநாயகர் வழிபாடும் தமிழ்நாடும் வடவேங்கடம் தென்குமரிக் கிடைப்பட்ட தமிழ கத்தில் பண்டைக் காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்க எாகிய தமிழ் மக்கள் கடவுள் உண்டு என்ற கொள்கை பினராக இருந்திருத்தல் வேண்டும் என்பது அச்சொல் உண்மையாலேயே பெறப்படுகின்றது. அச்சொல்லின் பொருளும் கடவுள் இலக்கணத்தை ஒருவகையில் உணர்த் துவதாக அமைந்திருப்பது மகிழ்தற்குரியதாகும். அன்றியும் கொடி நிலை, கந்தழி, வள்ளி யென்ற வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் - கடவுள் வாழ்த்தொடு கண்ணியவருமே' என்ற தொல்காப்பியச் சூத்திரமும் தமிழ் மக்கள் தெய்வங் கொள்கையுடையவர் என்பதை வலி யுறுத்துதல் காண்க, எனவே, கடவுட் கொள்கையடைய நம்முன்னோர் நாம் கடவுளை வழிபடுவதற்குரிய கோயில்களை நகரங்களிலும் பேரூர்களிலும் சிற்றூர்களிலும் எடுப்பித் திருத்தல்வேண்டும் என்பது ஒரு தலை. சேர சோழ பாண் டியரது தலை நகரங்களிலும் குறுநிலமன்னர் வாழ்ந்துவந்த நகரங்களிலும் பலகோயில்கள் அக்காலத்தில் இருந்தன என்பது சங்கத்துச் சான்றோர் அருளிய பாடல்காாலும் தொடர் நிலைச்செய்யுள்களாலும் நன்கு உணரப்படுகின்றது. இ-ஆ 61