பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

மிகையாகாது. இதுவே, டாக்டர் மு.வ. நாவல் உலகில்'தமக்கென்று வகுத்துக் கொண்ட தனிப்பாதை ஆகும் வேறெதற்காக இல்லாவிட்டாலும், இந்த ஒன்றுக்காகவாவது டாக்டர் மு. வ. தமிழ் நாவல் உலகில் தனியிடம் பெற்றுத் திகழ்வார் என்பது திண்ணம். டாக்டர் மு.வ: காட்டிய இந்த வழியைப் பின்பற்றும் ஒர் எழுத்தாளர் பரம்பரையே இன்று உண்டு:

மனித இயல்பை மிக நன்றாகத் தெளிந்த தெளிவு,பல்வேறு மனித இயல்புகளை இனிமையாகச் சித்திரிக்கும் பண்பு, சாதுரியமும் நகைச்சுவையும் இணைந்த இணைப்பு, பொறுக்கு மணிகளாகிய சிறந்த சொற்கள் அடங்கிய அழகியநடையால் அவற்றை வெளியிடும் தன்மை ஆகியவற்றிஞiல் தமிழ் நாவ லுக்கு இலக்கிய வடிவம் தந்த பெருமை டாக்டர் மு. வ. அவர்களேயே சாரும்: சுருங்கக் கூறின், தமிழ்மக்கள் நாவலின் இலக்கிய மதிப்பை உணர்ந்து அதைப் பாராட்டத் தொடங்கியதற்குக் காரணமாக அமைந்தவை டாக்டர். மு. வ. அவர்களின் நாவல்களே என்பதில் ஐயமில்லை.