பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 ★ இல்லம்தோறும் இதயங்கள்


என்றான். சங்கரன் ஒருபடி அதிகமாய் போய் “இதுக்குத் தான் இதுங்கள இங்க கூட்டிக்கிட்டு வரப்படாது” என்றான்.

மணிமேகலை பர்ஸில் இருந்து மூன்று ரூபாயை எடுத்து சீதாவிடம் நீட்டினாள். “நீங்களும் வாங்க அண்ணி. எனக்குப் பயமா இருக்கு” என்று சொல்லி, மணிமேகலை யின் கையைப் பிடித்து இழுத்தாள் சீதா, “சரியான செல்லக் கிறுக்கு” என்று லட்சுமி மோவாயைத் தூக்கிய போது மணிமேகலை மைத்துனியுடன் ஸ்டாலுக்குள் போனாள். மற்றவர்கள் அந்த ஸ்டாலுக்கு சற்றுத் தொலை வில் உட்கார்ந்தார்கள். பத்து நிமிடம் ஆகியிருக்கும். பதினைந்து ஆகியிருக்கும். போனவர்களைக் காண வில்லை. எல்லோரும் எதிர்பார்ப்புடன் பார்த்தபோது சீதா அங்கிருந்து ஓடிவந்து “அண்ணா, ஒன்ன டாக்டர் கூப்புடுறாங்க” என்றாள் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டே. ஜெயராஜ் “என்னடா இது வம்பு” என்று சொல்லிக் கொண்டே ஸ்டாலுக்குள் போனான். ‘பெண்களுக்கு’ என்றிருந்த அறைக்குள் போகலாமா வேண்டாமா என்று சிறிது யோசித்துவிட்டு, பிறகு மெள்ள மெள்ள நடந்து உள்ளே போனான். அங்கே—

லேடி டாக்டர், மணிமேகலையின் காதுக்கருகே மங்கலாக இருந்த ஒரு வட்டமான புள்ளியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, பிறகு அவளின் இதர மேனிப் பகுதிகளை உற்றுப் பார்த்துவிட்டு தலை நிமிர்ந்தவள், “நீங்க மிஸ்டர் ஜெயராஜா? வாங்கோ...” என்று சொல்லி அவனை இன்னொரு நாற்காலியில் உட்காரச் சொன்னாள். மணிமேகலை பித்துப் பிடித்தவள் மாதிரி, தான் இருப்பதே தனக்குத் தெரியாதது போல் இருந்தாள். டாக்டரம்மா பீடிகையுடன் பேசினார்:

“இந்த பேட்ச் இருக்கே இது ஒரு வகையான ஸ்கின்டிஸ்ஸிஸ். நான் பார்த்ததுல குஷ்டரோகத்துக்கான