பக்கம்:இல்லற நெறி.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக்கை 雷势臀

மனிதனைத் தவிர பாலுணிகள் 92 அனைத்தும் பின் பக்க நிலை யையே மேற்கொள்ளுகின்றன. அஃதாவது பெண்ணின் பின்புறமாக ஆண் இருந்து புணர்ச்சி நடைபெறுகின்றது. ஆல்ை, இம்முறை மானிட இனத்திடம் வழக்கமாக நடை பெறுவதில்லை. எனினும், உலகில் பல இடங்களில் இம் முறை ஒரு சிறிது சில சமயம் மேற்கொள்ளப்படுகின்றது. இதில் பென் ஒரு பக்கமாகப் படுத்து கணவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருப்பாள். கணவனும் ஒரு பக்கமாகப் படுத்துக் கொண்டு பின்புறமாக மனைவியை அணுகுவான். இம்முறையில் பெண் முழங்கைகளையும் மார் பையும் படுக்கையில் வைத்துக் கொள்வதும் உண்டு. அஃதாவது முழங்கால்கள் முழங்கைகள் ஆகியவற்றைப் படுக்கையில் வைத்துக் கொண்டு பசுவின் நிலையை மேற் கொள்ளுவாள். கணவன் அவளுக்குப் பின்புறமாக இருந்து கொண்டு ஒரு காளையைப் போல் அணுகிப் புணவர்வான். சில சமயம் அறிவார்வத்தின் 98 காரணமாக ஆண் நாய், மான், ஆடு, கழுதை, பூனை, புலி, யானை, குதிரை நிலைகளே மேற்கொண்டு புணர்வதுமுண்டு; இவை ஒவ்வொன்றும் காம நூலில் ஒவ்வொரு பொருத்தமான பெயர்களால் வழங் கப்பெறுகின்றன. இம்முறைகளில் எல்லாம் வகைப் பெருக் கக்கூறும் சிறுநீர்ப்புறவழிப்பகுதி நெருங்கி அமுக்கம்பெறு தல் அதே சமயத்தில் யோனிலிங்கமும் தூண்டப் பெறுதல் ஆகிய நன்மைகளையும் தவிர வேறு குறிப்பிடத்தக்க செளகரியம் ஒன்றும் இல்லை. இம்முறையில் ஆண்குறியை ஆழச் செலுத்த முடியாது. இஃது இருபாலருக்கும் உடல் சிரமத்தை விளைவிக்கின்றது. தவிரவும், நாகரிக மக்களிடம் புணர்ச்சியுடன் இன்றியமையாதுநடைபெறும் தழுவி முத்த மிடுதலுக்கும் இம்முறையில் இடமில்லாது போகின்றது.

92. umgyeoffs&—Mammals. 93. Jesúlaumfaith—Curiosity. 94. also sú GLGśså sta pl-Element of variety.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/413&oldid=598454" இலிருந்து மீள்விக்கப்பட்டது