பக்கம்:இல்லற நெறி.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 43 έ

ஏற்பாடுகளைச் செய்துகொள்ளல் போன்றவைகள் இத்துறை யில் பெரிதும் பயன்படுவனவாக இருக்கலாம். மணமக்கள் இவற்றில் தங்கள் கருத்தினைச் செலுத்துவார்களாக.

கணவன் தன்னுடைய மனைவியை நன்முறையில் புரிந்து அன்னியோன்யத்தை ஏற் படுத்திக்கொள்ளுதல், நுட்பமாக வும் திறமையாகவும் அவளுடன் பழகுதல், அவளுடைய பால் துடிப்புகளைச் சிறப்பாகவும், கலையுணர்வுடனும் எழுப்பும் திறனை பெறுதல், தனிப்பட்ட முறையில் அவளுக் குத் திருப்தியளிக்கக்கூடிய காதலுரடாட்டத்தையும் கலவி புரியும் முறைகளையும் கண்டறிதல் போன்ற செயல்களில் அவன் முக்கியமாகக் கவனத்தைச் செலுத்துதல் வேண்டும். மனைவியைப் பொறுத்த வரையில், அவள் தன்னுடைய இயற்கைக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளுதல், தன்னு டைய குறைபாடுகளை அறிந்து அவற்றைத் திருத்திக்கொள் வதன் அவசியத்தை உணர்தல் ஆகி வை மிகவும் முக்கிய மானவை. சாதாரணமாகப் பெண்கள் தங்கள் கலவியைப் பற்றிக் கவலை கொள்வதில்லை என்றும், கலவி தங்கட்கு யாதொரு இன்பத்தையும் அளிப் பதில்லை என்றும் மிகத் திருப்தியுடனும் பெருமிதத்துடனும் அடிக்கடிச் சொல்லிக் கொள்ளுதல் வழக்கம். பாலுணர்ச்சி இன்மையை அவர்கள் சிறந்த ஒழுக்கப் பண்பு என்றும், ஆன்ம நேயச்சிறப்பு என்றும் கருதிக்கொள்ளுகின்றனர். இத்தகைய ஒரு மனப் பான்மையே அவர்களிடம் பால்தோல்வியினை உண்டாக்கு வதற்கு ஒரு காரணமாக அமைகின்றது என்பதை ஒவ்வொரு பெண்ணும் நன்கு உளங்கொள்ளுதல் வேண்டும். திருமண இணக்கம் நன்முற்ையில் அமைய வேண்டுமாயின், ஒருவர் மீது மற்றவரின் பால்துலங்கல் மிகமிக இன்றியமையாதது என்றும் , பால்விருப்பமின்மை உடற்குறைவினையோ அல்லது போதுமான உள்ளக் கிளர்ச்சியின்மையையோ காட்டு கின்றதேயன்றி அது பெருமிதத்திற்கோ திருப்திக்கோ காரணமாகாதென்னும் ஒவ்வொரு பெண்ணும் நன்கு உணர்தல் வேண்டும். தன்னுடம் தக்க முறையில் பால்

2. Lmráð GS m á s^—Sexual failvre

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/437&oldid=598507" இலிருந்து மீள்விக்கப்பட்டது