பக்கம்:இல்லற நெறி.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506

இல்லற நெறி


43

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு :

நலன், நலன் தெரிவிக்க.

மணமக்களின் வாழ்க்கையில் உடல்நலத்தைப்பற்றிய வேறு சில செய்திகளை இக்கடிதத்தில் கூறுவேன்.

ஆணிடம் மாற்றம்': பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் சூதக ஒய்வு போன்ற மாற்றம் அ துடன் ஒப்பிடக்கூடிய மாற்றம்-ஏதாவது ஆணிடம் நிகழ்கின்றதா என்பதையறிய அதிக ஆவலுள்ளவகை இருப்பாய் என்று கருதுகின்றேன். பல அறிஞர்கள் இத்துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு :ெங்கை வெளியிட்டுள்ளனர். அவற்றை உரிய நூல்களில் கண்டுகொள்க.ே ஐம்பதுயாண்டுகட்குமேல் இல ஆடவர்களிடம் ஏற்படும் உடல், உள்ளக் கிளர்ச்சியற்றிய மாற்றங்கள் வாழ்க்கையின் மாற்றம் என்று வழங்கப் பெறினும் அவை பெண்களிடம் தோன்றும் சூதக ஒய்வினைப் போன்ற மாற்றங்கள் அன்று. பெண்களிடம் மாத ஒழுக்கு நின்று இனப் பெருக்கத் திறனும் மறைவது போன்று ஆன் களிடம் இனப்பெருக்கத் திறனில் யாதொரு மாற்றத் தையும் விளைவிப்பதில்லை; உடல் நிலையிலும் உள்ளக்கிளர்ச்சி நிலையிலும் யாதொரு அறிகுறிகளையும் தோற்று விப்பதில்லை.

எனினும், மிக அதிகமான வயதானதும் மனிதனும் படிப் படியாகப் பால் திறன்களை இழக்கின்ருன். மூப்பு ஆக ஆக பால் விழைவும் பால் திறனும் அவனிடம் ஒர் ஒழுங்கில் மறைந்துகொண்டே வருகின்றன. விறைத்தல் நிகழ்வதற்கே அதிகக் காலம் ஆகின்றது. பெரும்பாலும் இ து உடல் பற்றிய கூறே முக்கிய காரண்மாக இருப்பினும், ஒரளவு

56. Illustrated Encylopaedia of Sex—Chap.–47.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/512&oldid=1285325" இலிருந்து மீள்விக்கப்பட்டது