பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 இளமையின் நினைவுகள் அவருக்கு இடையில் தேர்தல் சம்பந்தமான ஒரு பெருவேலை வந்தது. அவரோடு இராப்பகலாக இருந்து அவற்றை யெல்லாம் கவனித்த எனக்குத் தேர்தல் வேடிக்கையாகவே இருந்தது. இந்துமத பாடசாலையை நடத்தும் வா. தி. மாசிலாமணி முதலியார் அவர்கள் பொதுப் பணியில் ஈடுபட்டவர்கள். இதுபோன்ற தேர்தல்களிலெல்லாம் தலையிட வேண்டாம் என்று அனைவரையும் வற்புறுத்துபவர்கள். இன்றும்கூடத் தேர்தலில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நல்ல வழியில் திருப்ப முயல்பவர்கள். ஆயினும் அன்று எப்படியோ அவர்கள் தேர்தல் சுழியில் சிக்கிவிட்டார்கள். .ெ சங் க ற் ப ட் டு மாவட்டக் கழக உறுப்பினர் தேர்தல் என்று நினைக்கிறேன். அவரை எதிர்த்து நின்றவர் யார் எனத் தற்போது திட்டமாக நினைவில்லை. சிலகாலம் அக்கழகத்தில் உறுப் பினராக இருந்த கோபால் நாயுடுவாக இருக்கலாமோ என எண்ணுகின்றேன். எப்படியாயினும் தேர்தலில் இவர் நின்றது முதலில் எனக்கு விந்தையாகவே இருந்தது. காலை வேளைகளில் மூழ்கி எழுந்து நான்கு மணிக்கு இறைவனை வழிபட்டு, பிறகு பள்ளித் தொண்டில் கருத்திருந்தும் இவருக்கு எப்படி இத்தேர்தல் நினைவு வந்தது என்பதை அன்று என்னல் எண்ணிப்பார்க்க இயலவில்லை. ஆனல் இன்று அவர் பல ரு க்கு உபதேசம் செய்யும்போது, இப்படிப்பட்ட நல்லவர் அன்று ஏன் அப்படி நின்று அத்தனை அரும்பாடுபட்டார் என்று நினைப்பது வழக்கம். அவர் தேர்தலில் நின்ற வேடிக்கையைக் காட்டிலும் அவர் அச்சிட்ட துண்டுப் பிரசுரங்கள்தாம் அதிக வேடிக்கையாக இருந்தன. எதிரி வேகமாக வேலை செய்தார் என நினைக்கிறேன். ஆகவே இவர்களும் அதிகமாகச் செய்யவேண்டியதாயிற்று.