பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இளமையின் நினைவுகள் இவர்களைப் பற்றி ஏதோ எழுதி இருப்பார் என நினைக்கி றேன். அதை மறுக்கும் முகத்தான் பல மறுப்புகளும், மறுப் புக்கு மறுப்புகளும் வெளிவந்தன. அவற்றுள் ஒன்று வைர ஆப்பு என்ற தலைப்பில் வெளிவந்தது. எதிரி கிளப்பிய ஏதோ ஒரு விவிைற்குத் தக்க பதில் தந்து அவர் வாய டைத்து, ஒன்றும் எழுதாது நிற்கும் நிலையில் அந்தஎழுத்தை அமைத்து அதற்கு இப்பெயர் இட்டார்கள் என நினைக்கி றேன். அதற்கும் அவர்கள் மறுப்பு எழுதினர்களோ இல் லையோ என்பது எனக்கு நினைவில் இல்லை. சுமார் இருப துக்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு ஊர் தோறும் சென்று சென்று, கொடுத்துக் கொடுத்து உபதேசம் செய்த போதிலும் இறுதியாக அப்பா தோல்வியுற்ருர்கள்; எதிரி வெற்றி பெற்ருர். அப்பா தோல்வி யுற்றது சாதாரணம்தான். அத்தோல்வியைத் தோல்வி எனக் கருதாது சிரித்த முகத்தோடு அதை ஏற்று அன்று முதல் அத்துறைப்பக்கம் நோக்கா நிலையில் உள்ள அவர் உள்ளதைத்தான் நான் அடிக்கடி நினைக்கிறேன். ஒருவேளை அவர்கள் அத்தேர்தலில் வெற்றி பெற்றிருப்பார்களாயின், தொடர்ந்து அந்தத் துறையிலேயே அவர்கள் மனம் சென்று பள்ளியைக் கவனியாது விட்டிருக்கலாம். பதவியில்அவர்கள் மேன்மேல் உயர்ந்திருக்கலாம். ஆல்ை இந்துமதப்பள்ளி இன்றிருக்கும் நிலையில் தழைத்து வளர்ச்சியுற்று சிறந்திருக் காதே. இதை நினைக்கும்போது அப்பாவிற்கு அந்தத் தோல்வி தோல்வியே அல்ல; வெற்றிதான் என்று அடிக்கடி நான் சொல்வதுண்டு. தேர்தல் காலத்தில் அத்தகைய துண்டுப் பிரசுரங்களை யெல்லாம் எழுதியவர் தலைமை ஆசிரியர்தான். அவர் தம் எழுத்தில் விறுவிறுப்பு இருந்ததோ என்னவோ, அப்பா அவர்கள் அவற்றைப் படித்துப் படித்து மகிழ்வார்கள். நான்