பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அல்லி அர்ச்சுை 45 சில சில சிறிய கம்பெனிகள் நாடகம் நடத்துவதாக ஊர் தோறும் வந்து மாட்டுக் கொட்டகைகளை வாடகைக்கு எடுத்து ஒரு சில நாடகங்களை நடத்திச் செல்வார்கள். அந்த நாடகங்களைப்பாட்டுகளுடன் அச்சிட்டுச் சிலர் விற்றுப் பணம் சம்பாதித்தார்கள். அப்படி அச்சேறிய நாடகங்களுள் அல்லி அர்ச்சு'ைவும் ஒன்று. பாரதக் கதையில் இல்லாத ஒரு புது நாடகம் இது. சென்ற நூற்ராருண்டின் இறுதியிலும் இந்த நூற்ருண்டின் தொடக்கத்திலும் இப் படி எத்தனையோ நாடகங்கள் எழுதப் பெற்றன போலும். பெரிய புராணத் தில் இல்லாத புனைந்துரை பெற்ற நந்தனர் சரித்திரம் கோபாலகிருஷ்ணபாரதியாரால் கீர்த்தனைவடிவத்தில் வெளி வந்துள்ளதை அனைவரும் அறிவர். அக்கீர்த்தனைகள் நடந்த கதையைக் கூருவிட்டாலும் காதுக்கு இனிமையாகப் பாடிக் கேட்கப் பயன்படுகின்றன. இல்லை அல்லி அர்ச்சுனன் பவளக்கொடி போன்ற நாடகங்கள் நல்ல தமிழிலும் இனிய பாட்டுக்களிலும் அமைந்தன வல்ல. ஏதோ கண்டவர் எழுதி அச்சிட, கண்டவர் நடித்த நாடகங்களாக அவை இருந்தன 6T6 JT6 JT6NYITLs). அந்தக் காலத்தில் எனக்கு இந்த வகையிலெல்லாம் எண்ணத் தோன்றவில்லை. நாடகத்தில் நடிப்பதைப் பெறுதற்கரிய பேறு என நினைத்தேன். நல்ல வேலை நடேச ஐயர் எனக்கு அந்த நாடகத்தில் கிருட்டினன் வேடம் கொடுத்தார். என் வீட்டில் அடிக்கடி அலங்காரம் செய்வார்கள்; நான் என் வீட்டில் பிள்ளையும் பெண்ணுமாக வளர்ந்த காரணத்தால் என் அன்னை நன்ருக நகைபூட்டி என்னை அலங்கரிப்பார்கள். பெண் வேடம் அணிவிப்பார்கள். என் தலையில் அதிக மயிர்த்திரள் இருக்கும். அதை அழகழகாகப் பின்னித் தொங்க விடுவார்கள். என் பாட்டிக்கு அழகாகப் பின்னத் தெரியும். கோயில் அம்மனுக்கு மலர் வகைகளில் அவர்கள்