பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இளைஞர்
இஸ்லாமியக்
கலைக்களஞ்சியம்


அக்பர் : இந்த அரபுச் சொல்லுக்கு 'மிகப் பெரிய' அல்லது 'மாபெரும்' என்பது பொருளாகும். வல்ல இறைவனை அல்லாஹ் அக்பர் என்று நாம் போற்றுகிறோம். இதற்கு 'அல்லாஹ் மிகப் பெரியவன்' என்பது பொருளாகும்.

இந்தியாவை ஆண்ட மாபெரும் முகலாய மன்னர் ஒருவரின் பெயர் அக்பர். இவர் இந்திய மன்னர்களிலேயே பெரும் புகழ்பெற்ற முஸ்லிம் பேரரசர் ஆவார். இவரது முழுப்பெயர் ஜலாலுத்தின் முஹம்மது அக்பர் என்பதாகும். இவருடைய தந்தை மன்னர் ஹுமாயூன் ஆவார். அக்பர் 1542ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் பதின்மூன்றாவது வயதிலேயே முடி சூட்டப்பட்டார். சிறு வயது முதலே இவருக்குப் படிப்பதில் நாட்டம் செல்லவில்லை. இதனால் இவருக்கு எழுதப் படிக்கத் தெரியாமலே போயிற்று படிப்பறிவு இல்லாவிட்டாலும் படித்த அறிஞர்களோடு உறவாடி தம் கேள்வி ஞானத்தைப் பெரிதும் வளர்த்துக் கொண்டார். படிக்காத மேதையாக விளங்கினார். இவர் தம் அரசவையில் பல்வேறு துறை அறிஞர்களையும் ஆதரித்து வந்தார்.

இவருக்கு இளமை தொட்டே விளையாட்டிலும் வேட்டையாடுவதிலும் ஆர்வம் மிகுதி. இதனால் இவருக்கு மனவலிமையும், வீர உணர்வும் மிகுதியாக இருந்தன.

இவர் தம் ஆட்சிக் காலத்தில் பல பெரும் போர்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். தென்னகம் நீங்கலாக