பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இளைஞர் தொலைக்காட்சி $?súq (Persistence of vision): ssir திரையில் படும் ஒவ்வோர் ஒளி உணர்ச்சியையும் ஒரு விடிைப் பொழுதில் பதினறில் ஒரு பங்கு நீலத்து நிற்கச் செய்யும் பண்பே இது. ஒளியின் உறைப்பில் உண்டாகும் மாறு பாட்டைக் கண் உடனே உணராததால் இது நேரிடுகின்றது. புறச் செவி (Pinna): தலையில் வெளிப்புறமாகத் தெரியும் காதின் பகுதி இது. காதுமடல்' என்றும் இதனை வழங்குவர். பெருக்காடி (Magnifying glass): சிறிய பொருள்களின் வடிவைப் பெருக்கிக் காட்டும் வில்லையாலான ஓர் அமைப்பு. பெருக்குங் குழல் (Amplifier tube) : தொலைக் காட்சிக் காமிராவினின்றும் வெளிப்படும் மின்சாரச் சைகைச்செய்தி களை வலுவுடையனவாக்கி அனுப்பும் கருவிக்குச் செலுத்தும் ஒருவித மின்னணுக் குழலாகும் இது. r fiáràrìà oðir (Electro - magnetic waves) : வானெலி நிகழ்ச்சிகளை ஒலிச் சைகைச் செய்திகளாகவும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை ஒளிச் சைகைச்செய்தி களாகவும் ஏற்றுச் செல்லும் அலைகள் இவை; ஒளியலைகளின் வேகத்தையுடையவை. இவற்றின் ஊடகமும் வானியே flirhol. (Electrical resistance) : Srđèsom a Gabráš கம்பிகளிடையேயும் மின்னேட்டம் ஒரே மாதிரியாகச் செல்வ தில்லை. அங்ங்னம் செல்வது அக்கம்பியின் பெளதிக வேதியல் குணங்கள், அக்கம்பியின் நீளம், அதன் குறுக்கு வெட்டுப் பரப்பு இவற்றைப் பொறுத்தது. இங்ங்னம் மின்னேட்டம் செல்வதற்குத் தடையாக இருப்பதை இப் பெயரால் குறிப்பர். மின்னணுக்கள் (Electrons) : எதிர் மின்னணுக்கள்' என்ற தலைப்பில் காண்க.