பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இளைஞர் தொலைக்காட்சி றனர். நாம் புத்தகத்திலுள்ள வரிகளைப் படிக்கும் பொழுது இடப்புற ஓரத்திலிருந்து வலப்புற ஒரம் வரை கண்ணே ஒட்டிப் படிக்கின்ருேம் உருது மொழியைப் படிப்பவர்கள் வலப்புற ஓரத்தில் தொடங்கி இடப்புற ஒரம்வரை படிக்கின்றனர். சீனமொழியைப் படிப்போர் மேலிருந்து தொடங் கிக் கீழோரம் வரையில் படிப்பர். ஒளிபரப்பிலும் அநேகமாக இப்படியே செய்கின்றனர். தொலைக்காட்சிக் கர்மிரா செயற்படுவதை முன்னர் விளக்கினேம். மின்னணுத் துப்பாக்கியி னின்றும் கண்ணுடித் தட்டின் மீது விழும் மின் னணுக் கற்றை வரி வரியாக விழுகின்றது என் பதையும் குறிப்பிட்டோம். இக்கற்றை படத்தின் ஒவ்வொரு துண்டத்தையும், துண்டத்தின் ஒவ் வொரு பகுதியையும் நுட்பமாகவும் தனியாகவும் பிரகாசமாகத் தோன்றச் செய்வதைத்தான் துரு விப் பார்த்தல்' (Scanning) என்று வழங்குகின் றனர். இப்படியாகப் படத்தில் ஒரு கோடியில் தொடங்கி வரிசை வரிசையாகப் படம் முழுவதை யும் துருவிப்பார்க்கச் செய்கின்றனர். இதை இன்னும் தெளிவாக விளக்குவோம். தொலைக்காட்சிப் படம் துண்டங்களாக்கப்பெறும் முறையை அடியிற் கண்ட படம் விளக்குகின்றது. இந்தப் படத்தில் முதலில் ஒர் ஒளிக்கிற்றை A என்னுமிடத்திலிருந்து B என்னுமிடத்திற்குச்