பக்கம்:ஈச்சம்பாய்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

169



படிக்கத்தான் செய்றாங்க... இவ்வளவுக்கும் அவங்க, ஒன் மகன் மாதிரி, 'ஐ.ஐ.டி'க்கு ஓட்ட சைக்கிள்ல போன பசங்க இல்ல.... இந்த ஊர்ல மோட்டார் பைக்கில போயிட்டு, அந்த ஊர்ல பேப்பர் விற்காங்க... நம்ம லலிதா மகன் சேகர் இருக்கான் பாரு...'

'ஊரு பிள்ளைங்கள தலையில் தூக்கிக் கொண்டாடுங்க.. ஒங்க பிள்ளைய கால்ல போட்டு மிதிங்க... நல்ல தகப்பன்...'

'பிள்ளை பெருசானால், புருஷனை, பெண்ட்டாட்டி மதிக்க மாட்டாள்னு சங்கரசுப்பு சொன்னது சரியாத்தான் இருக்கு.. அவனுக்காக நான்பட்ட கடன அடைக்க வழி சொல்லிட்டு, அப்புறம் ஒம் மகன் கார் வாங்கின பெருமையை, நீ தெருபூரா . தம்பட்டம் அடிக்கலாம்.... அமெரிக்கா... பொல்லாத அமெரிக்கா... நம்ம வரிப்பணத்துல படிக்கிற பசங்க அத்தனை பேரும் இப்படி சுயநலமா வெளிநாடு போனால், நாடு உருப்படுமா, இல்ல வீடு உருப்படுமா.'

'ஏன் இப்படி கத்துறீங்க... அக்கம்பக்கத்துல எட்டிப் பாக்காங்க. ஏன் இப்படி பேய்..'

'கோதை... கொஞ்சம் வெளியில போறியா..'

கோதையம்மா, உடனடியாய் வெளியேறினாள். அவர் கோபத்தின் உச்சிக்குப் போகும்போது, அவர் அங்கிருந்து உதிர்க்கும் உயர்ந்தபட்ச வார்த்தைகள் இவை என்பதை உணர்ந்தவள் போனாள்... அப்படி போகாவிட்டால், இவர் போய்விடுவார்... அப்புறம் எப்போ வருவாரோ... எப்படி வருவாரோ...'

என்றாலும், கோதையம்மா, அந்த அறையில் இருந்து, சாதாரணமாய் வெளியேறாமல் வெளிநடப்பு செய்கிறவள்போல் போனாள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/171&oldid=1371863" இலிருந்து மீள்விக்கப்பட்டது