பக்கம்:ஈச்சம்பாய்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

189



மாத்திரையைக் கொடுத்தாள். அவனோ தலையை, பலமாய் ஆட்டினான். அவள் பார்வையைத் தவிர்த்தபடியே, "எம்மா, எப்பா" என்றான்.

"அடக் கடவுளே... பழையபடியும் பிரஷரா-. டாக்டர்கிட்டே போகலாம். ஸ்கூட்டர் கூட்டிட்டிட்டு வாரேன்.."

"வேண்டாம்... சந்திரா... நீ என்னை விட்டு எங்கேயும் போகவேண்டாம். போகப்படாது."

"அப்போ - மிஸ்டர் அப்பாத்துரையை, ஆட்டோ கொண்டுட்டு வர-"

"யார் போனாலும் அந்த அயோக்கியன் போக்க கூடாது. யப்பா ... எப்படி தலை சுற்றுது..."

சந்திரா, அவனைப் பிடித்துக் கொண்டாள். மெல்லத் தூக்கி அவன் முதுகைத் தன் மார்போடு சாய்த்துக் கொண்டு, நகர்த்தி நகர்த்தி படுக்கையறைக்குக் கூட்டி வந்தாள். ஆடைகளைச் சிறிது தளர்த்தி விட்டாள். தலையைத் தூக்கி, தலையணையை வைக்கப் போனாள். அவனோ அவள் மடியில் தலை போட்டான். சந்திரா... சந்திரா... என்று கூவியபடியே அவள் இடுப்பைச் சுற்றிப் பிடித்தான்.

அவள் யோசித்தாள். சத்தம் போட்டே சொன்னாள்.

"இருபது நாட்களாய் வராமல் இருந்துட்டு. அட கடவுளே!"

அவனைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. அவனுக்குக் கொடுக்க வேண்டிய மருந்து புரிந்தது. தப்பு -- தப்பு. தானே உட்கொண்டு... அவனைக் குணப்படுத்த வேண்டிய மருந்து. யாரோ ஒருவனுக்குக் காதலியாக ஆகப்போவதுபோல் பயந்தவன், இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/191&oldid=1371842" இலிருந்து மீள்விக்கப்பட்டது