பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

145


ஒருமுழி முழிக்க ஒருமுழி பிதுங்க
பலவகை நாணயம் பாங்காகத் தெரிந்து"

என்று கூறப்படுகிறது.

'அருள்மலை திங்களூர் நொண்டி நாடகம்' என்ற நூலை திங்களூர் அவிநாசிப்புலவர் பாடியுள்ளார். அதில்வரும் நொண்டி திருடிய நாணயப்பட்டியலில்

உளுந்தார்ப் பேட்டைப் பணம்,
காசிப்பணம்,
சுல்தானிப்பணம்
மயிலிப்பணம்

ஆகியவைகள் கூறப்படுகின்றன. கொங்கு நாட்டில் நாணயம் அச்சடிக்கும் "கம்பட்டம்", "அக்கசாலை" ஆகியன இருந்துள்ளன.