பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

149


கல்வகைகள்

ஈரோடு மாவட்டம் பாறைகளும் கற்களும் நிறைந்த பகுதி, மேல் பரப்பிலும், நிலத்தின் அடியிலும் பல்வேறு வகையான கற்கள் கிடைக்கின்றன, கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் நிலத்தைப் பிறருக்கு விற்பனைக்கோ தானமாகவோ அளிக்கும் போது நிலத்தில் கிடைக்கும் எட்டுவகைப் பயன்களையும் சேர்த்து அளிப்பது வழக்கம். "சல, தரு, பாசாண, நிதி,நிட்சேப, அட்சிணி, ஆகாம்ய, சித்த, சாத்தியம்" எனக்குறிப்பர். அதில் 'பாஷாணம்' என்பது கல் வகைகளைக் குறிக்கும்.

கருங்கற்கள்

கருங்கற்களில் இருவகை உள்ளன. பளபளப்பாக இழைக்கப் பயன்படும் உயர்ரகக்கற்கள், சாதாரணக் கருங்கற்கள் என இருவகை. ஈரோடு மாவட்டத்தில் நினைவுச் சின்னங்கள். மாளிகைகள் கட்டப் பயன்படும் உயர்ரகக் கற்களை மெருகூட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியைப் பலர் செய்து வருகின்றனர். சாதாரணக் கற்கள் கட்டிடம் கட்டவும் சிறு கற்களாக்கி (ஜல்லி) பயன்படுத்தவும் அரவை இயந்திரங்களில் பொருத்தவும், அம்மி, செக்குகள் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.

இரத்தினக்கற்கள் (Gemstones)

பழைய கோட்டை, முள்ளிப்புரம், பாப்பினி, சிவமலை, காங்கயம், சென்னிமலை சூழ்ந்த பகுதிகளில் இரத்தினக்கற்கள் கிடைக்கின்றன.

பீங்கான் (Syenite)

பாத்திரங்கள், சுவரில் பதிக்கும் கற்கள். கழிவறைக் கழிப்புப் பொருள்கள், கழுவும் தொட்டிகள் (Wash Basin) செய்யப் பீங்காள் பயன்படுகிறது. பசுமை நிறம் கலந்த பீங்கான் வீட்டு அலங்காரப் பொருள், நினைவுச் சின்னம் செய்யப் பயன்படுகிறது. பெருமாள் மலையின் மேல்புறமும், சிவமலைப் பகுதியிலும் பீங்கான் கிடைக்கிறது.

பிறகற்கள்

சிமெண்ட் தொழிற்சாலைக்கு ஜிப்சம் பயன்படுகிறது. தாசரிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் ஜிப்சம் கிடைக்கிறது. ஓடக்கல் (Concur}