பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

185


1871ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி ஈரோடு நகராட்சி தொடங்கப்பட்டது. 1876இல் முதன்முதலில் டவுன் ஆரம்பப்பள்ளியை நகராட்சி தொடங்கியது. சில தனியார் பள்ளிகளையும் நகராட்சி ஏற்றது. 1887இல் தசப்பையர், அண்ணாசாமி அய்யங்கார் இருவரும் "டவுன் உயர்நிலைப்பள்ளியைத்" தொடங்கினர். பின்னர் நடத்த முடியாமல் இலண்டன் மிஷனுக்கு விற்றுவிட்டனர். தந்தை பெரியாரின் தந்தை ஈ.த. வெங்கிடநாயக்கரும், கே.ஏ.ஷேக் தாவூத் அவர்களின் தந்தை அலாவுதீன் சாகிப்பும் பள்ளியை மீட்டுப் பொது மக்கள் உதவியுடன் "மகாஜன பள்ளிக்குழு"வின் மூலம் "மகாசன உயர்நிலைப்பள்ளி" என்ற பெயரில் 1899இல் பள்ளியை நிறுவினர். இதே கல்விக்குழு 12.7.1954இல் மதாசனக்கல்லூரியை 12 ஏக்கர் பரப்பளவில் தொடங்கியது. இதுவே மாவட்டத்தின் முதல் கலைக்கல்லூரியாகும். பின் இக்கல்லூரி "சிக்கய்ய நாயக்கர் மகாசனக் கல்லூரி' என்றும், பின்னர் 'சிக்கய்ய நாயக்கர் கல்லூரி' என்றும் பெயர் மாற்றம் பெற்றது.

1896இல் விக்டோரியா மகாராணியின் வைரவிழா நினைவாக கோபிசெட்டிபாளையம் வைரவிழா பள்ளி தொடங்கப்பட்டது. 1899 இல் பவாளியில் பள்ளியை சி.சி.பிலகைன் என்ற ஆங்கிலேயர் தொடங்கினார். பெண்களுக்காக முதன் முதலில் மாவட்டத்தில் ஏற்பட்ட உயர் நிலைப்பள்ளி ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் ஆகும்.

கோயமுத்தூரில் ஜி.டி.நாயுடு தன் போக்குவரத்து நிறுவனத்தில் பல மாணவர்கட்கு முழுநேரப் பயிற்சி கொடுத்தார். இரவில் கூடப் பயிற்சி தரப்பட்டது. அதே போல 1920 பி.எஸ்.ஜி நிறுவனம் மாணவர்கட்குத் தம் தொழிற்சாலையில் பயிற்சி அளித்தது. அந்நிறுவனம் 9.11.1927இல் தச்சு, இயந்திர வேலை, மின்சார வேலை, அச்சுப் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கியது. 1939இல் LEE, LME, LPT பட்டயப்படிப்புத் தொடங்கப்பட்டது. 1944ல் நெசவுத்தொழில் பயிற்சி யில் LTM பட்டயப்படிப்புத் தொடங்கப்பட்டது.

பி.எஸ்.ஜி. நிறுவனத்தில் ஜி.டி.நாயுடு விரும்பிய சில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பெறவில்லை. அவர் பரிந்துரைத்த சில மாணவர்கட்கும் இடம் கிடைக்கவில்லை. தொழில் பயிற்சிக் கல்லூரி