பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

219


அண்மையில் ஈரோடு மாவட்டத்தில் பல செவிலியர் பயிற்சிப் பள்ளி, மருந்தாளுநர் கல்லூரி, முடநீக்கியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த பல்துறை மருத்துவக்கல்லூரியும் உள்ளது.

தமிழகப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஐ.ஆர்.டி.டி. மருத்துவக் கல்லூரி பெருந்துறை காசநோய் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவம்

ஈரோடு மாவட்டத்தில் தொன்று தொட்டே கால்நடை வளம் மிகச் சிறந்து விளங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை வருமாறு (2001)

பசு - 377354
எருமை - 231225
செம்மறியாடு - 526470
வெள்ளாடு - 445217
பன்றி - 7326
குதிரை - 1049
கோழி - 4557726

இம்மாவட்டத்தில் தற்போது வாத்து, ஈமு கோழி, முயல், புறா ஆகியனவும் வேறு சில பறவையினங்களும் வளர்க்கப்படுகின்றன.

2 முதன்மை மருத்துவமனைகளும் 10 மருத்துவமனைகளும் 69 மருந்தகங்களும் 4 நடமாடும் மருத்துவமனைகளும் 2 வெக்கை தடுப்புக் குழுக்களும் 90 கிளை மருத்துவ நிலையங்களும் கால்நடைகளுக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ளன.

பழையகோட்டைப் பட்டக்காரர்கள் மரபுபற்றிப் பாடிய பாடல்களில் கால்நடை மருத்துவக் குறிப்புகள் பல உள்ளன. 'மாட்டு வாகடம்" என்ற கால்நடை மருத்துவ ஏடுகள் பல கிடைத்துள்ளன.