பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


நானும் ஒரு அன்புப் பரிசை--கனியை--ஏதோ என்னால் இயன்றதைக் கொண்டு வந்திருக்கிறேன்.

சுயமரியாதை இயக்கத் திருமணங்களை நடத்திச் சாதி ஒழிப்புக்காகப் பெரியார் பாடுபட்டு வருகிறார். பகுத்தறிவுத் திருமணங்களும் கலப்புத் திருமணங்களும் நாட்டில் ஏராளமாக நடைபெற்றிருக்கின்றன. இந்தத் திருமணங்களைச் செல்லுபடியாக்கச் சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டுவரப் போகிறோம் என்ற நல்ல செய்தியை-அன்புப் பரிசை-கனியை பெரியாரிடம் அளிக்கிறேன்.