பக்கம்:உரிமைப் பெண்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

உரிமைப் பெண்

 கல்லுப் பிள்ளையார் மாதிரி ஒருவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாது உட்கார்ந்திருப்பான். அவனுக்குக் கோபம் வராது.

“சொங்கப்பா, கல்யாணம் பண்ணிக்கிருயா? நான் வேணும்னா எங்காவது ஒரு நல்ல பொண்ணுப் பார்த்து உனக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று சிலர் அவனைக் கேட்பார்கள். அப்படிக் கேட்டு அவனைப் பேச்சுக்கிழுப்பதிலே அவர்களுக்கு ஒரு தனி இன்பம். ஆனால் அந்தக் கேள்வியே காதில்விழாததுபோல அவன் அமர்ந்திருப்பான்.

நான்கைந்து தடவை வற்புறுத்திக் கேட்டால், “வாண்டாம்; நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்” என்று பதில் வரும். சொங்கப்பன் முகத்திலே அப்பொழுதுகூட மாறுதல் எதுவும் விசேஷமாக உண்டாகாது. கொஞ்சம் சிரிப்பின் சாயல் லேசாகப் படரும். அவனுடைய மூளையிலே ஏதோ சிறிது கிளர்ச்சி ஏற்பட்டது போலத் தோன்றும். மறுகணத்திலே அதுவும் மறைந்துவிடும்.

அவனை ஒரு மசையன் என்று எல்லோரும் சொல்லுவார்கள். அப்படிப்பட்டவனுக்குப் பொன்னப்பன்மேல் அவ்வளவு பெரிய கோபம் வந்ததை அறிந்துதான் எல்லோரும் ஆச்சரியமும் திகைப்பும் அடைந்தார்கள்.

சொங்கப்பன் ஒரு அநாதை. குழங்தைப் பருவத்திலிருந்து அவன் காட்டுப்பாளையம் என்ற அந்த ஊரிலே தான் இருக்கிறான். ஆனால் அவனுடைய தாய் தந்தையர்கள் யாரென்று ஒருவருக்கும் தெரியாது. பஞ்சம் பிழைப்பதற்காக அந்த ஊருக்குச் சுமார் முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் வந்திருந்த யாரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/7&oldid=1136587" இலிருந்து மீள்விக்கப்பட்டது