பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 உரைநடைக் கோவை "நறுந்தண் தகரமும் நானமும் நாறும் நெறிந்த குரற்கூந்தல் நாளணிக் கொப்ப நோக்கிற் பிணிகொள்ளுங் கண்ணோடு மேனாணீ பூப்பலி விட்ட கடவுளைக் கண்டாயோ? எனவும், "கண்ட கடவுளர் தம்முளு நின்னை வெறிகொள் வியன்மார்பு வேறாகச் செய்து குறிகொளச் செய்தார் யார்... சிறுவரைத் தங்கின் லெகுள்பவர்' எனவுங் கூறினாள். இப் பாடற் பகுதியின் பொருள் பின் வருமாறு: 'உன்னைப் பெறவேண்டு மென்னும் விருப்பத்தால் நீ குறிப்பிட்ட குறியீடத்தே தம்பால் வந்து விழுந்து முளைத்த பற்களை யுடையராய்க் கண்டவர்களுக்கு மரணத் துன்பத்தை யொத்த மயக்கத்தைச் செய்யும் வடிவுடையராய் நின் இல்லிடத்தே சேரும் முறைமை யினையுடைய கடவுளரைக் கண்டாயோ?' என்பதும் 'பார்வையாலே தம்வயப் படுத்துங் கண்கள் வருத்துத லால், மணமிக்க குளிர்ந்த மயிர்ச் சாந்தமும் புகழும் மணக்கும் கருமணல் போன்ற நெருங்கிய கூந்த லுக்கு நாட்காலத்துச் செய்யும் அலங்காரத்துக்குப் பொருந்த முதல் நாளே மலர்களைத் தூவி வழிபடப் பெற்ற கடவுளைக் கண்டாயோ?' என்பதும், 'அங்ங னம் கண்ட கடவுளருள், நின் மனத்தை வேறாகப் பண்ணி வானப்பிரத்த ஆச்சிரமத்தை மேற்கொள்ளச் செய்த முனிவரர் யாவரோ? அவர்பாற் செல்லாது சிறிது பொழுது நீ இங்கே தங்கினும் அவர் வெகுள் வர்; ஆதலின், அவ்விடத்தே செல்வாயாக' என்பது