பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் கடிதங்கள் N. ANN. 107 கானற் கடல் விளையாட்டினுள் கோவலனூடக் கூடா தேகிய பின், மனவேதனை தீரத் தன்னில்லத்துத் தனித்திருந்து சிறிது நேரம் யாழை இசைத்துப் புற நீர்மை என்னும் வாசிக்குங்கால், அவ் பண்ணை விசை யின்பத்திற் காதலன் கூடலின்பம் தோன்ற மயங்கித் தெளிவுற்றுப் பின்னர்த், தன் காதலற்கு இன்ன விதமாகத் தன் கருத்தைத் தெரிவிக்க வேண் டும் என்பதைத் தானே துணிந்து திருமுகம் போக்கும் செவ்வியளாய் எழுதத் துணிந்தாள். இங்ஙனம் மாதவியின் இயல்பை மனத்துட் கொண்டு, அவள் தகுதிக்கேற்ப ஆசிரியர் அவள் காதற் கடிதத்தை அழகுற முடித்தது பெரிதும் பாராட்டத் தக்கூத. இவ்வாறு காதல் வயப்பட்டாருள், எழுது வோர் எழுதப்படுவோர் இயல்புகள். எழுதும் வாசகங் கள், அவ் வாசகக் கருத்துக்கள், கடிதம், எழுது கோல், மை முதலிய கருவிகள் என இவ்வெல்லா வற்றையும் புலவர் பெருமக்கள் செவ்விய முறையிற் சிந்தித்துக் காதல் நறுமணங் கமழப் புலப்படுத்தியது போற்றத்தக்க தொன்றாம்.