பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. குறுந்தொகை * அன்புமிக்க ஐயன்மீர் ! அன்னைமீர்! இக்குறுந்தொகை மாநாட்டில் நிகழும் அரிய சொற்பொழிவுகள் எல்லாவற்றையும் ஒழியாது கேட்டு மகிழும் பேற்றுக்கு உரிய பதவியை எனக்கு அன் புடன் அளித்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சர்க்கு என் நன்றியறிவை முதலிற் புலப்படுத் திக் கொள்ளுகின்றேன். 1 உலகத்துப் பருப் பொருள்களைக் காண்டற்குக் கருவியாக மக்களுக்கு அமைந்த புறக்கண்போல், புறக்காட்சிக்குப் புலனாகாத நுண்பொருள்களை அறிந்து தெளிதற்குரிய அகக்கண் அமைதல் இன்றியமை யாத தென்பது யாவரும் உணர்வர். பருப்பொருள் களைக் காணும் புறக்கண்ணும் அகக்கண்ணின் துணை யின்றி அப் பொருள்களின் இயல்புகளைப் பகுத்துணர் தற்கு வலிவுடையதாகாது. ஆகவே, புறக்கண்ணினும்

  • இது சென்னையிற் கூடிய குறுந்தொகை மாநாட்டில்

நிகழ்த்திய தலைமையுரை.