பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை அகக்கண் மக்கட் டன்மைக்குச் சிறப்பாக வேண்டப் படுவதென்பதை அறிகின்றோம். இவ்வகக்கண் யாதாக இருக்கலாம் எனின், இதற்கு விடையாகப் பேரறிஞர் கள் எல்லோருங் கூறியது ஒன்றே.அது கல்வி யென்பதை. 109 " எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழும் உயிர்க்கு' என்பதனால் உணரலாம். இக்கல்வி ஒவ்வொரு நாட் டினர்க்கும் அவ்வந் நாட்டுமொழி வாயிலாக இருத்தல் வேண்டும் என்பதும், பின்னர் வேண்டப்படும் வேற்று மொழிப் பயிற்சி அறிவாற்றற்கேற்ப இருக்கலாம் என் பதும் அறிஞர் கண்ட முடிபுகளாம். நமக்குரிய நாட்டு மொழியைப் புறக்கணித்து வேற்று மொழியில் எத் துணை மேற்சென்றாலும் மொழி யறிவாற் பெறும் பயன் முற்றும் பெற்றதாக மர்ட்டாது. இந்நிலையில் நாம் இன்றியமையாது பயிலவேண்டுவது நமக்குரிய தமிழ் மொழியே யாகும். இம் மொழிக்கண் உள்ள இலக்கிய நூல்களுள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியங்கள் காலத்தால் முற்பட்டனவாம். மொழி வளமும், பொருள்களின் இயற்கையை உள்ள படி எடுத்து விளக்கும் ஆற்றலும், உவமையழகும், ஊன்றிப் படிப்பார்க்கு உணர்ச்சியின்பம் ததும்பச் செய்யும் இயல்பும் ஒருங்கமைந்து விளங்குவன சங்க இலக்கியங்களேயாகும். சில்வகை எழுத்தானாய செந் தமிழ்ச் சொற்களும் தொகை நிலைத் தொடர்களும் கரு திய பொருள்களைத் தெளிவுறுத்துவனவாக அப்பாடல்