பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$18 உரைகக் கோவை உவமை கூறித் தெளிவுறுத்தப்பட்டது. கண்ணாடியின், முன்னின்றார், தம் கையையும் காலையுந் தூக்குங்கால் அக்கண்ணாடியில் தோன்றும் எதிருருவாகிய பாவை யும் அங்ஙனமே தூக்குமென்பது எளிதிற் காணப்படுவ தொன்று. இதனால் ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே" என்புழிப்போல, இறைமை தலைவி பாலதாக, அவள் இயக்கியாங்கு இயங்குதல் தெளி வுறுத்தப்பட்டது. இது பரத்தை கூற்றாதலின் அவள் மனம் வேறுபட்ட நிலையிற் கூறியதுபற்றித் தலைமகன் பெருமைக்கு இழுக்காகாதென்பது ஈண்டு அறியத் தக்கது. 4. பிறிதோரிடத்து, சிறிய உயிரில் அமைந்து கிடக்கும் பெரிய காதலின் இயல்பை உவமிக்கக் கருதிய ஆசிரியர், சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே "" என்கின்றார். வேரிற் பழுக்கும் பழத்தை நீக்குதற்குக் கோடெனவும் சிறு பழததை நீக்குவதற்குப் பெரும் பழமெனவுங் கூறினர். மரக் கொம்பை மகளிர்க்கு வமையாக்குதல் கவி மரபு. இங்கே உடலோடு உயிர்க்குள்ள ஒற்றுமை கருதியும், உயிர் அணுவென்று கூறப்படுதல் பற்றியும், தலைவியின் இளமைச் செவ்வி நினைந்தும் சிறு கோடு உவமையாயிற்று. இத்தகைய சிற்றுயிரில் தங்கிய வேட்கையோ மிகப் பெரிதென்பது போதரவும், நுகருந் தலைமகனுக்கு அது பேரின்பஞ் செய்யுமென்பது பற்றியும் காமத்திற்குப் பெரும் பழம் உவமையாயிற்று. காமம் நறுங்கனியாகக் கூறப் படுதலை,