பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கோவை ஆராய்ந்து தெளிவுபெற எடுத்தெழுதும் வன்மை யாளரே உண்மை உரையாசிரியராவர். யார் யார் எவ் வெத் திறத்து நூல்களிற் பயிற்சிமிக்குடையாரோ அவரவர் அவ்வத்திறத்து நூல்களுக்கு உரை யெழுதப் புகல் வேண்டும். அங்ஙனமின்றிக் கல்லாத மேற் கொண்டொழுகல் தவறுடைத்தாம். சைவ நூலில் ஒரு சிறிதும் பயின்றறியாதார் ஒருவர் சைவத்தலைமணி யாகத் திகழும் திருவாசகம் திருவிசைப்பாக்களுக்கு முற்றும் உரையெழுதித் தம் புரைநெறியை வெளிப் படுத்தியுள்ளார். இத்தகையார் தம் தகுதிக்கு இயலாத இவ்வுயா நூல்களுக்கு உரை காணப் புகுந்து உண்மைப் பொருள் காண இயலாமல் இடர்ப்பட்ட தோடு, மரபுக்கு முரணாகவும் பல எழுதினர். பிழை பட்ட எல்லாவற்றையும் ஈண்டு விளக்கல், மிகையாத லின் ஒன்று காட்டுவேன். "நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார், வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி, ஊனா ருடைதலை மேல் உண்பவிதேர் அம்பலவன்" என்னும் திருப்பாட் டில் 'மதிமயங்கி' என்பதைப் பெயராகக் கொண்டு ஆறாம் வேற்றுமை யுருபு விரித்து மதிமயக்கமுற்ற பிரமனது தலையோட்டிற் பலிதேரும் அம்பலவன் என முடித்துக் காட்ட அறியாமல், அதனை வினையெச்சமாகக் கொண்டு மதிமயக்கத்தை அம்பலவர்க் கேற்றினர். இன்னோரன்ன பலவுள். ஒரு புலவன் காலக் கழிவு நோக்காது நெடிதாராய்ந்து தன் வாணாளில் ஒரு நூற்கு உண்மையுரை எழுதி முடிப்பினும் போதியதே. பிழைபடப் பல வெழுதுதலிலும் பிழையறச் செப்ப னிட்டு ஒன்று எழுதுதல் நன்றாம். 26